For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலியல் சர்ச்சையால் ஆஸ்கர் குழுவில் இருந்து வெளியேற்றப்பட்டார் ஹார்வி வைன்ஸ்டீன்

By BBC News தமிழ்
|
ஏற்கனவே பாஃப்டாவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் ஹார்வி.
PA
ஏற்கனவே பாஃப்டாவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் ஹார்வி.

ஹார்வி வைன்ஸ்டீன் மீது தொடர்ந்து பல பாலியல் தாக்குதல் குற்றசாட்டுகள் வருவதால், அவரை ஆஸ்கர் குழுவில் இருந்து வெளியேற்ற, ஆஸ்கருக்கு பின்னணியில் இருந்து செயல்படும் அமைப்பு முடிவு செய்துள்ளது.

ஹார்வியை நீக்குவதற்கு பெரும்பான்மையை நிரூபிக்க தேவைப்படும் மூன்றில் இரண்டு பங்கு ஓட்டுகளை விட, அதிகமான ஓட்டுகள் வந்துள்ளது என தி அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் தெரிவித்துள்ளது.

அந்த குழுவின், ஹாலிவுட் பிரபலங்கள் டாம் ஹாங்க்ஸ் மற்றும் வூபி கோல்ட்பெர்க் ஆகியோரும் உள்ளனர்.

வைன்ஸ்டீனின் படங்கள் இதுவரையில் 300 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதோடு, 81 விருதுகளை வென்றுள்ளன.

அகாடமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாரிகள் அவரை வெளியேற்றியது என்பது, சக அமைப்பினரின் தகுதிக்கு மரியாதை அளிக்காத இவரை, குழுவில் இருந்து விலக்கி வைப்பது என்பது மட்டுமல்ல, இது, இந்த துறையில், பாலியல் துஷ்பிரயோகம் நடக்கும் நிலைகளில், விருப்பமில்லாத அறியாமை மற்றும் அவமானகரமான முறையில் உடந்தையாக இருப்பது உள்ளிட்ட சகாப்தங்களும், பணியிட பாலியல் துன்புறுத்தல்களும் முடிந்துவிட்டன என்ற செய்தியை கூறுவதற்கே என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், நமது சமூகத்தில் இடம் பெறக்கூடாத, மிகுந்த வேதனையளிக்கும் ஒரு தீவிர பிரச்சனை உருவெடுத்துள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

ஹாலிவுட்டில் உள்ள முக்கிய நடிகைகளான ஏஞ்சலினா ஜோலி, குவெனித் பால்ட்ரோ, ரோஸ் மெக்கோவன் உள்ளிட்ட இரண்டு டஜன் நடிகைகளுக்கு மேல், வைன்ஸ்டீன் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியதன் தொடர்ச்சியாக, வாரியத்தின் இந்த அவசர கூட்டம் நடைபெற்றது. அதில், ரோஸ் மட்டுமே, ஹார்வி தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறியிருந்தார்.

ஆஸ்கர் விருது விழாவில் ஹார்வி.
Getty Images
ஆஸ்கர் விருது விழாவில் ஹார்வி.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள காவல்துறையினர் இந்த குற்றசாட்டுகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

65 வயதாகும் வைன்ஸ்டீன், தனது சில நடத்தைகளுக்காக மன்னிப்பு கோரியபோதும், பாலியல் ரீதியான தொடர்புகள் ஒப்புதலோடு நடந்தவை என்றும், தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றவியல் பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்புணவு ஆகிய குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்.

ஹாரிவியின் சகோதரரான, பாப், ஒரு ஹாலிவுட் செய்தியாளரிடம் , தனது மோசமான, வக்கிரமான சகோதரர் அகாடமியைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்று கூறியதற்கு பின்பு, இந்த வெளியேற்றம் நடந்துள்ளது.

திரைப்பட இயக்குநர் உட்டி ஆலன் பிபிசியிடம் பேசுகையில், இதில் சம்மந்தப்பட்ட அனைவருக்குமே இது மிக வருத்தமானது என்று கூறியுள்ளார்.

இதில் சம்மந்தப்பட்ட பெண்கள் அனைவருக்கும் இது சோகமானது, ஹார்விக்கு இது வருத்தமானது. மொத்த சூழலுமே மிகவும் வருத்தமானது. இதில் வெற்றியாளர் என யாருமில்லை என்று நியூயார்க்கில் தெரிவித்தார்.

வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, இனி வைன்ஸ்டீனால், ஆஸ்கரில் பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்களுக்கோ, வெற்றியாளர்களுக்கோ வாக்களிக்க முடியாது.

ஹாலிவுட்டில் உள்ள பல பிரபலங்கள் இந்த வேகமான செயலை பாராட்டியுள்ள நிலையில், மற்ற உறுப்பினர்கள் மீது இத்தகைய நடவடிக்கையை எடுக்குமாறும் சிலர் கேட்டுள்ளனர்.


இதன் பின்பு, எங்கு செல்லும் அகாடமி

பிபிசி லாஸ் ஏஞ்சலீஸ் செய்தியாளர் லாரா பிக்கர்.

அகாடமி, பல ஆண்டுகளாக இந்த துறையில் பேசப்பட்டு வந்த படுக்கை அறை கலாசாரம் என்பது முடிந்துவிட்டது என்ற செய்தியை தெரிவிக்க முயல்கிறது.

ஒரு பணியை பெருவதற்கு, சுரண்டல் தான் விலை என்று பெண்கள் எண்ணும் வகையிலான ஒரு கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளதாக ஹாலிவுட் மீது குற்றசாட்டுகள் உள்ள நிலையில், இது ஒரு முக்கிய செயலாக பார்க்கப்படுகிறது.

ஆனால், ஹார்வியை வெளியேற்ற நடைபெறும் வாக்கெடுப்பில் ஆஸ்கர் அகாடமிக்கு ஒரு பிரச்சனை உள்ளது.

ஹார்வியின் செயல்பாடு என்பது, பலர் தெரிவித்தது போல, ஒரு பெரிய பனிமலையின் நுணியாக இருந்தால், அவரைப் போலவே, பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் பெற்றுள்ள பில் காஸ்பி, ரோம்ன் பொலான்ஸ்கி உள்ளிட்டவர்களை என்ன செய்யப் போகிறது அகாடமி?

1999இல் நடந்த ஆஸ்கர் நிகழ்ச்சியில்
PA
1999இல் நடந்த ஆஸ்கர் நிகழ்ச்சியில்

என்னிடம் பேசிய பலரும், அகாடமியின் இந்த கண்டன செயல்பாடுகள் இத்தோடு நிற்கக் கூடாது என்றனர்.

அகாடமியில் இருந்து இரண்டாவதாக நீக்கப்படும் உறுப்பினர் ஹாரி. 2004 ஆம் ஆண்டு, ரகசிய, திரைப்பட விமர்சன காணொளியை நண்பருக்கு அனுப்பி, பின்பு அது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதால், நடிகர் கார்மைன் கரீடி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

மிரமேக்ஸ் பிக்சர்ஸ் மற்றும் வைன்ஸ்டீன் நிறுவனத்ததின் துணை நிறுவனரான ஹார்வி, ஹாலிவுட்டில் அதிகம் கொண்டாடப்பட்ட, பல்ப் ஃபிக்ஷன், தி இங்கில்ஸ் பேஷண்ட் மற்றும் ஷேக்ஸ்பியர் இன் லவ் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

ஆஸ்கர் விருதை பெற்ற பின்பு, பேசப்படும் நன்றி உரைகளில் டஜன் கணக்கில் அவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, 2012ஆம் ஆண்டு, ஆஸ்கர் பெற்ற பின்பு பேசிய நடிகை மெரில் ஸ்ட்ரீப், அவரை கடவுள் என விளையாட்டாக குறிப்பிட்டார்.

ஆனால், ஹார்வி மீதான குற்றச்சாட்டுகள் வரத் துவங்கியவுடன், இந்த துறையில் உள்ள பல முக்கிய புள்ளிகள், பொதுவெளியில் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். மேலும், பாஃப்டா, ஹார்வியின் உறுப்பினர் உரிமத்தை இடைநீக்கம் செய்துள்ளது.

பிரான்ஸில் குடிமக்களுக்கு அளிக்கப்படும் உயரிய பட்டமான, தி லெஜன்ட் ஆப் ஹானர் எனும் பட்டத்தை ஹார்வியிடம் இருந்து திரும்ப பெறுவது குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவரின் சி.பி.இ பட்டத்தை திரும்ப பெறக்கோரியும் பல பரிந்துரைகள் இங்கிலாந்து அரசியல்வாதிகள் சார்பில் வருவதாக கூறப்படுகிறது.

ஹார்வி
Alexander Koerner/Getty Images
ஹார்வி

மோசமானவர் மற்றும் வக்கிரமானவர்

ஹலிவுட் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாப் வைன்ஸ்டீன் தனது சகோதரரை, மோசமானவர் மற்றும் வக்கிரமானவர் என்று குறிப்பிட்டதோடு, அவர் இத்தகைய மற்ற விலங்குகளை கொன்று திண்ணும் விலங்காக இருப்பார் என எண்ணவில்லை என்றார்.

சமீபத்திய ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் போது, பெண்களுடனான அவரின் நட்பு குறித்து, ஹர்வியின் சகோதரருக்கும், வைன்ஸ்டீன் குழுமத்திற்கும் தெரியும் என ஹார்வி தெரிவித்திருந்தது குறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்த அவரின் சகோதரர், குழுமத்தின் மூத்த அதிகாரிகளுக்கு, தனது சகோதரரின் செயல்பாடுகள் இவ்வளவு தூரம் சென்றுள்ளது என தெரியாது என்றார்.

மேலும், ஹார்வியின் மன்னிப்பு அறிக்கையை, முட்டாள்தனமானது என்றும், நொண்டி சாக்கு என்றும் அவர் கூறினார்.

எனக்கு என்ன தெரியும் என்பதை நான் கூறுகிறேன், ஹார்வி பிறரை கிண்டல் செய்பவர், திமிர் பிடித்தவர் என்பது மட்டும் தெரியும் என்றார்.

ஹார்வி, தன்மீது சுமத்தப்படும் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகளை மறுப்பதோடு, சகதரப்பின் ஒப்புதல் இல்லாமல் பாலியல் தொடர்பு நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை, ஹார்வியின் மனைவி அவரை பிரிவதாக தெரிவித்தார்.

பிற செய்திகள்

BBC Tamil
English summary
The organisation behind the Oscars has voted to expel Harvey Weinstein following numerous allegations of sexual assault made against the film producer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X