For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதிய வானம்.. புதிய பூமி.. கண்டுபிடித்தது நாசா.. இன்று அறிவிப்பு?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பூமிக்கும் அப்பால் இன்னொரு பூமி இருக்கிறதா என்ற ஆய்வு நீண்ட நெடுங்காலமாக நடந்தபடி உள்ளது. இப்போது அதில் வேகம் பிடித்துள்ளது. இந்த நிலையில் பூமியைப் போன்ற இன்னொரு பூமியை கெப்ளர் டெலஸ்கோப் கண்டுபிடித்துள்ளதாகவும், இன்று இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகப் போவதாகவும் விஞ்ஞான உலகம் பரபரப்பாகியுள்ளது.

புதிய பூமியை கண்டுபிடிக்கும் கடைசிக் கட்டத்தில் விஞ்ஞானிகள் இருப்பதாக நாசாவும் தெரிவித்துள்ளது. இன்று நடைபெறவுள்ள பிரஸ் மீட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளதாம்.

கெப்ளர் தொலைநோக்கி...

கெப்ளர் தொலைநோக்கி...

2009ம் ஆண்டு நிறுவப்பட்டது இந்த கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி. அன்று முதல் இதுவரை 1028 கிரகங்களை அது கண்டுபிடித்துள்ளது.

பூமி மாதிரியே...

பூமி மாதிரியே...

இந்த நிலையில் கிட்டத்தட்ட பூமி போலவே உள்ள ஒரு புதிய கிரகத்தை அது கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுகுறித்த அறிவிப்பைத்தான் இன்று நாசா வெளியிடவுள்ளது.

நாசா...

நாசா...

இன்று வெளியாகப் போகும் அறிவிப்பில், புதிய பூமி குறித்த அறிவிப்பு இருக்கக் கூடும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

எக்ஸோபிளானட்...

எக்ஸோபிளானட்...

1995ம் ஆண்டு நமது பூமியைப் போலவே ஒரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. அது நமது பூமி எப்படி சரியனைச் சுற்றி வருகிறதோ அதேபோல இன்னொரு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. இதற்கு எக்ஸோபிளானட் என்று பெயர். இதுபோன்ற எக்ஸோபிளானட்டுகள், பூமி அல்லது அதை விட சிறிய அளவில் உள்ளன.

புதிய கிரகம்...

புதிய கிரகம்...

இருப்பினும் அதுகுறித்த ஆய்வுகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த நிலையில், பல ஆயிரம் ஆண்டுகளாக பூமியில் உள்ள மக்கள் கனவு கண்டு வருவது கிட்டத்தட்ட நனவாகும் வகையிலான ஒரு கண்டுபிடிப்பை நாசா செய்துள்ளது. அதுதான் பூமியைப் போன்ற இன்ணொரு கிரகம் குறித்த கண்டுபிடிப்பு. அதைத்தான் நாசா கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

1028 கிரகங்கள்...

1028 கிரகங்கள்...

தற்போது பூமியிலிருந்து 150 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வரும் கெப்ளர் தொலைநோக்கியானது, இதுவரை 1028 கிரகங்களையும், 4661 கிரகம் போன்றவற்றையும் கண்டுபிடித்துத் தெரிவித்துள்ளது.

ப்ளூட்டோ...

ப்ளூட்டோ...

இதுவரை நாம் கண்டுபிடித்துள்ளது 9 கிரகங்கள்தான். அதில் ப்ளூட்டோ தற்போது குள்ள கிரகமாக தரம் குறைக்கப்பட்டு விட்டது.

கெப்ளர் 186...

கெப்ளர் 186...

கடந்த ஆண்டுதான் குடியேறக் கூடிய வகையிலான பூமியைப் போன்ற ஒரு கிரகத்தை கெப்ளர் கண்டுபிடித்தது. இதுவும் பூமியைப் போலவே உள்ளதாக கூறப்பட்டது. இதற்கு கெப்ளர் 186எப் எனறு பெயரிடப்பட்டது. இது பூமியலிருந்து 500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. நம்மைப் போலவே உள்ள ஒரு கிரகமாக இது கருதப்படுகிறது.

பூமியை விட பெரியது...

பூமியை விட பெரியது...

அதேபோல இன்த ஆண்டு ஜனவரியில் கெப்ளர் 438 பி, 442 பி என மேலும் இரு கிரகங்களை கெப்ளர் கண்டுபிடித்தது. இதில் பி கிரகமானது பூமியை விட 12 சதவீதம் பெரிதாகும். 442 பி கிரகமானது 33 சதவீதம் பெரிதாகும்.

பூமியின் அளவில்...

பூமியின் அளவில்...

ஜூலை மாதத்தில் கெப்ளர் அதே நட்சத்திரத்தை சுற்றி 4 கிரகங்கள் சுற்றி வருவதாக கண்டுபிடித்தது. அந்த நட்சத்திரத்திற்கு கெப்ளர் 444 என பெயரிடப்பட்டுள்ளது. அனைத்துமே பூமியின் அளவில் உள்ளதாக கூறப்பட்டது.

வெயிட் அண்ட் ஸீ...

வெயிட் அண்ட் ஸீ...

நாசாவின் நாளைய அறிவிப்பு புதிய வானம், புதிய பூமி என்று பூமியில் உள்ளவர்களை சந்தோஷத்துடன் பாட வைக்குமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

English summary
Nasa is due to hold a news conference on Thursday to reveal the latest discoveries from its Kepler Space Telescope, which has been scouring the skies for planets outside our own solar system.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X