For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெனுவிலிருந்து ஒயினை நீக்க மறுப்பு: பிரான்ஸ் அதிபர் ஏற்பாடு செய்த விருந்தை புறக்கணித்த ஈரான் அதிபர்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பிரான்ஸ்: சாப்பாட்டு மெனுவில் இருந்து ஒயினை அகற்ற முன்வராததால் பிரான்ஸ் அதிபருடனான விருந்தை ஈரான் அதிபர் தவிர்த்துள்ளார்.

ஈரான் மீதான பொருளாதார தடையை மேற்கத்திய நாடுகள் சமீபத்தில் விலக்கிக்கொண்டன. இதையடுத்து, வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில், ஈரான் அதிபர் ஹசன் ரவுகனி, சமீபத்தில், பிரான்ஸ் சென்றார்.

Hassan Rouhani says no to lunch as Hollande refuses to remove wine from menu

பிரான்ஸ் அதிபர் பிரான்கோசிஸ் ஹாலண்டேவுடன் பல வர்த்தக ஒப்பந்தங்களில் ஹசன் கையெழுத்திட்டார். குறிப்பாக, பயணிகள் விமானம் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இரு நாட்டு அதிபர்களும், பாரீஸ் நகரத்தில் விருந்து உண்ண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், விருந்து ஹலால் முறைப்படி இருக்க வேண்டும் என்ற கோரிக்கை ஹசன் ரவுகனி தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டது. மேலும், சாப்பாட்டு மெனுவில் ஒயின் இடம்பெற கூடாது என வலியுறுத்தப்பட்டது.

மேலை நாடுகளில் ஒயின் கவுரவம்மிக்க பானமாக பார்க்கப்படுவதால், அதை நீக்க பிரான்ஸ் மறுத்துவிட்டது. இதனால், விருந்து நிகழ்ச்சியை ஹசன் ரவுகனி ரத்து செய்துவிட்டாராம். ஆனால், சமீபத்தில் ஈரான் அதிபர், இத்தாலி சென்றபோது, அவர் கேட்டுக்கொண்டபடி, விருந்துக்கு அந்த நாடு ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
A lunch between French President Francois Hollande and his Iranian counterpart Hassan Rouhani was cancelled after France refused to remove wine from the menu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X