For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தகிக்கும் பிரான்ஸ்.. முதல்முறையாக நெருப்பில் அமர்ந்திருப்பது போன்ற வெப்பம்.. என்ன காரணம்?

Google Oneindia Tamil News

Recommended Video

    France heat wave | பிரான்ஸில் முதல்முறையாக நெருப்பில் அமர்ந்திருப்பது போன்ற வெப்பம்

    ரோம்: பிரான்ஸ் நாட்டில் 45 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் தகித்து வருகிறது. இந்த வெப்பத்தால் குற்றவாளிகள் கூட வெளியே வர அஞ்சுகிறார்கள் என கூறப்படுகிறது.

    பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறுவதால்தான் பூமி வெப்பமாகின்றன என்பதை விஞ்ஞானிகள் ஏற்கெனவே தெரிவித்துள்ளனர். எனினும் அது குறித்து யாருக்கும் எவ்வித அக்கறையும் இல்லை என்பதை போல் மக்கள் உள்ளனர்.

    அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் குற்றவாளிகள் கூட அஞ்சும் அளவுக்கு வெப்பம் தகிக்கிறது என காவல் துறையினர் அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். இந்த வெப்பநிலை 40 டிகிரியை அடைந்ததால் அமெரிக்கர்கள் வெப்பத்தால் அவதியுற்று வருகின்றனர்.

    கன மழை.. வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை.. பல ரயில்கள், விமானங்கள் ரத்து கன மழை.. வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை.. பல ரயில்கள், விமானங்கள் ரத்து

    ஐரோப்பியர்கள்

    ஐரோப்பியர்கள்

    அமெரிக்காவின் கால்பந்து வீரர் மிச் பெட்ராஸ் ஒரு நாள் முழுவதும் வெயிலில் பயிற்சியில் ஈடுபட்டதால் அவர் உயிரிழந்தார். ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக கோடைக்காலத்தை ஐரோப்பியர்கள் சந்தித்து வருகின்றனர்.

    பதிவு

    பதிவு

    மேற்கு ஐரோப்பியாவின் மிக உயரமான மலைத்தொடரான பிளாங்க் வழக்கமாக ஜூன் மாதத்தில் உறைந்து காணப்படும். ஆனால் இந்த ஆண்டோ அங்கு 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அது போல் பிரான்ஸிலும் 45 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

    23 முதல் 26 டிகிரி

    23 முதல் 26 டிகிரி

    முந்தைய ஆண்டை விட 2.6 டிகிரி அதிகமாகும். கடந்த 2003-ஆம் ஆண்டு காலை நேரத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாக இருந்தது. இதே மாலை நேரத்தில் 23 முதல் 26 டிகிரியாக குறைந்தது.

    வெப்பக்காற்று

    வெப்பக்காற்று

    பிரான்சில் நெருப்புக்குழியில் அமர்ந்திருப்பது போன்ற வெப்பநிலைக்கு காரணமாக ஏசி எனப்படும் ஏர் கண்டிஷனிங் கூறப்படுகிறது. அதிகப்படியாக ஏசிக்களை பயன்படுத்தினால், வெளியில் வீசும் காற்று வெப்பக்காற்றாகவே இருக்கும்.

    குளிர்ச்சிக் காற்று

    குளிர்ச்சிக் காற்று

    மரங்களை வளர்க்க வேண்டும். அப்போதுதான் வெளிக்காற்றை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். கடந்த 50 ஆண்டுகளாக அதிகப்படியான வெப்பம் நிலவுகிறது. பருவநிலை மாற்றத்தால் வெப்பக்காற்று வழக்கத்தை விட 10 மடங்கு அதிகரித்துள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

    English summary
    Heat wave in France results people are sitting in oven like situation. Experts says that the situation happens because of Climate Change.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X