For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நமிபியாவில் கடும் பஞ்சம்: திண்டாடும் மக்கள்.. மடியும் கால்நடைகள்.. எமர்ஜென்சியை அமல்படுத்திய அதிபர்

Google Oneindia Tamil News

Recommended Video

    Namibia Drought | நமிபியாவில் பஞ்சம்: எமர்ஜென்சியை அவசர நிலையை அமல்படுத்திய அதிபர்- வீடியோ

    விண்ட்ஹோக்: நமிபியாவில் தலைவிரித்தாடும் பஞ்சத்தால் அந்நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

    தென்மேற்கு ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நமிபியா நாட்டில் சுமார் 25 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். தனிநபர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடாக உள்ளது நமிபியா.

    இங்கு அடிக்கடி பருவமழை பொய்து போவதும் இதனால், குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களுக்கு கடுமையா பஞ்சம் ஏற்படுவதும் வாடிக்கை. இந்நிலையில் நமிபியாவில் இந்த ஆண்டும் கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

    மழை வந்தாலும் மோசம்... மழை வராட்டியும் மோசம்... சென்னைக்கு தண்ணீரில் கண்டம் மழை வந்தாலும் மோசம்... மழை வராட்டியும் மோசம்... சென்னைக்கு தண்ணீரில் கண்டம்

    வறண்ட தேசம்

    வறண்ட தேசம்

    பருவமழை பொய்து போனதால் தேசமே வறண்டு போயுள்ளது. விளை நிலங்களும் பொதுமக்கள் வசிக்கும் பகுதியும் பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.

    வெளியேறும் மக்கள்

    வெளியேறும் மக்கள்

    குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளே கிடைக்காத நிலையில் தவித்து வருகின்றனர் மக்கள். இனியும் இங்கு காலம் தள்ள முடியாது என்று எண்ணி இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

    மடியும் கால்நடைகள்

    மடியும் கால்நடைகள்

    ஏராளமான கால்நடைகளும் ஆங்காங்கே செத்து மடிந்துள்ளன. கடந்த 6 மாதங்களில் மட்டும் 60000க்கும் மேற்பட்ட வீட்டு வளர்ப்பு பிராணிகள் உயிரிழந்துள்ளன. இதனால் மக்களுக்கு நோய் பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.

    40 மில்லியன் டாலர் செலவில்

    40 மில்லியன் டாலர் செலவில்

    பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வறட்சியை போக்கும் வகையில் 40 மில்லியன் டாலர் செலவில் உணவு வழங்கவும் தண்ணீர் டேங்குகளை அமைக்கவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் வறட்சி பகுதிகளில் இருந்து கால்நடைகளை வெளியேற்றவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    எமர்ஜென்சி அமல்

    எமர்ஜென்சி அமல்

    இந்நிலையில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக அவசரநிலை சட்டத்தை அந்நாட்டின் அதிபர் ஹகே ஜிய்ன்கோப் பிரகடனப்படுத்தியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் 2வது முறையாக நமிபியாவில் அவரசநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

    உலக நாடுகளுக்கு கோரிக்கை

    உலக நாடுகளுக்கு கோரிக்கை

    நமிபியா பிரதமர் சாரா குகொங்கெல்வா, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள நமிபியாவுக்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். போதுமான அளவு பருவமழை பெய்யாததே வறட்சிக்கு காரணம் என்று கூறியுள்ள பிரதமர், பாதிக்கப்பட்டுள்ள நமிபிய மக்களுக்கு நமிபியர்களும் வளர்ச்சி பங்கீட்டாளர்களும் உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    English summary
    Heavy drought hits Namibia. Emergency declared in Namibia due to heavy drought.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X