For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேபாளத்தில் சிக்கி தவித்த 104 பக்தர்கள் முதல் கட்டமாக மீட்பு.. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பலி

நேபாளத்தில் கனமழையால் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான இந்தியர்களில் முதல் கட்டமாக 104 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கனமழை, கடுங்குளிரால் நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்- வீடியோ

    காத்மாண்டு: நேபாளத்தில் கனமழை பெய்து வருவதால் சிக்கித் தவித்த இந்திய யாத்ரீகர்களில் முதல் கட்டமாக 104 பேர் மீட்கப்பட்டுள்ளனர். எனினும் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் பலியாகிவிட்டார்.

    திபெத்தில் உள்ள கைலாஷ் மற்றும் மானசரோவருக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருவது வழக்கம். இந்த ஆண்டும் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் உள்பட இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் புனித யாத்திரைக்கு சென்றுள்ளனர்.

    Heavy rain in Nepal: 104 pilgrims rescued as the first phase

    யாத்திரையை முடித்துவிட்டு திரும்பும்போது நேபாளத்தில் மோசமான வானிலையால் மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்களை இயக்கமுடியாமலும், வாகனங்களை சென்றடைய முடியாமலும் ஆயிரக்கணக்கான இந்தியர் பரிதவித்து வந்தனர்.

    தகவலறிந்த இந்திய தூதரகம் அவர்களை மீட்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் வாகன வசதியின்றி கடுங்குளிரில் சிக்கித் தவித்த 104 பேரை முதல் கட்டமாக மீட்பு படையினர் மீட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    இந்நிலையில் கடுங்குளிர் தாளாமல் ஏற்கெனவே கேரள மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள ஆண்டிபட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான ராமசந்திரன் பலியாகிவிட்டார்.

    English summary
    104 pilgrims were rescued as the first phase who stranded without any vehicles in Nepal- China border.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X