For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவில் வரலாறு காணாத பனி... இருப்பு பாதையில் தீ வைத்து ரயில்கள் இயக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்காவில் வரலாறு காணாத பனி- வீடியோ

    சிகாகோ: அமெரிக்காவில் நிலவும் கடும் பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    அதே சமயம், ரயில் பாதைகள் சூடாக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    ஆர்க்டிக் துருவத்தின் மேலடுக்குக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால், அமெரிக்காவில் வரலாறு காணாத உறைய வைக்கும் பனி ஏற்பட்டுள்ளது.

    போக்குவரத்து முடக்கம்

    போக்குவரத்து முடக்கம்

    சிகாகோவில் இரவு நேரங்களில் மைனஸ் 50 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை நிலவி வருகிறது. கடும் பனி காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதே போல், சிகாகோவில் உள்ள மிச்சிகன் ஏரி முழுதும் உறைந்து போய்விட்டன.

    22 டிகிரி வெப்பநிலை

    22 டிகிரி வெப்பநிலை

    புதன் கிழமையன்று குறைந்தபட்சம் 22 டிகிரி வெப்பநிலை பதிவு உள்ளதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னால் சிகாகோவில் 1985ம் ஆண்டு மைனஸ் 27 டிகிரி பாரன்ஹீட் (-33 டிகிரி செல்சியஸ்) பதிவானது தான் குறைந்தபட்ச வெப்ப நிலையாகும்.

    தண்டவாளத்தில் தீ

    தண்டவாளத்தில் தீ

    ரயில் சேவைக்காக பழைய முறையான தண்டவாளத்தில் தீ வைத்து, பாதையை சூடாக்கி ரயில்கள் இயக்கப்படும். அந்த வகையில் தற்போது, நிலவி வரும் வரலாறு காணாத உறைபனியை தொடர்ந்து, ரயில் பாதைகளில் தீ வைக்கப்படுகிறது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

    மெட்ரோ விளக்கம்

    மெட்ரோ விளக்கம்

    இதற்கிடையே, தண்டவாளத்தில் தீ வைப்பதற்கு மாற்றாக, எங்கு பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதோ அங்கு மட்டும், கியாஸ் மூலம் தீப்பிழம்புகள் ஏற்படுத்தப்பட்டு, இரும்பு பாதைகள் சூடாக்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிகாகோ மெட்ரோ போக்குவரத்து சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    US freezes: Set fire on Train Tracks allow train service
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X