For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ஊர்க் காவலனான" அழகி.. உள்ளே வராமல் அஞ்சி ஓடிய கொரோனா.. குட்டி தீவான சமோவாவின் வெற்றிக் கதை

Google Oneindia Tamil News

ஏபியா: மத்திய தென் பசிபிக் கடலின் ஒரு குட்டி தீவான சமோவாவில் கொரோனா வைரஸ் எட்டிக் கூட பார்க்கவில்லை. ஒரு சின்ன தீவில் இது எப்படி சாத்தியம் என்றால் அந்தநாட்டு அழகிதான் கொரோனா உள்ளே வராதபடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

வல்லரசு நாடுகளே கொரோனா பாதிப்பால் சிக்கித் தவித்து வரும் நிலையில் பசிபிக் கடலில் உள்ள ஒரு குட்டி தீவான சமோவாவில் கொரோனா பாதிப்பே இல்லை. இதற்கெல்லாம் காரணம் அந்நாட்டு அழகியாக தேர்வு செய்யப்பட்ட பெண்தான் என்கிறார்கள்.

அந்நாட்டு அழகியாக ஃபோனோ மெக்ஃபார்லாந்து சியூமனு கடந்த அக்டோபர் மாதம் தேர்வு செய்யப்பட்டார். அவர் தேர்வு செய்யப்பட்ட சில மாதங்களிலேயே அந்த நாட்டில் மீசில்ஸ் எனப்படும் தட்டம்மை நோய் அந்த தீவு மக்களுக்கு ஏற்பட்டது.

வைகாசி விசாகம் விரதம் - முருகனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கும்வைகாசி விசாகம் விரதம் - முருகனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கும்

தடுப்பூசி

தடுப்பூசி

இதில் குழந்தைகள் உள்பட 83 பேர் பலியாகிவிட்டனர். வெறும் 2 லட்சம் மக்கள்தொகையை கொண்ட சின்னத் தீவில் தட்டம்மையை எதிர்கொள்ள புதிதாக வந்த அழகி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். அதில் ஒன்றுதான் தடுப்பூசி போடும் திட்டம். அந்த தீவின் சுகாதார துறை செவிலியர் ஒருவருடன் தினந்தோறும் வீடுவீடாக செல்லும் ஃபோனோ அங்குள்ள குழந்தைகள் உள்பட அனைவருக்கும் தட்டம்மை தடுப்பூசி போட்டு வந்தார்.

தட்டம்மை

தட்டம்மை

தட்டம்மை காலகட்டத்தில் அவசர காலம் பிரகடனப்படுத்தப்பட்டது. இது முடிந்தவுடன் தடுப்பூசி போடும் திட்டத்தை ஃபோனோ தொடங்கினார். வாரத்தில் இரு தினங்களுக்கு ஊரக கிராமப்புறங்களுக்கு சென்று குழந்தைகளுக்கு ஊசி போட்டார். தட்டம்மை வந்ததிலிருந்து அந்த தீவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.

எதிரொலி

எதிரொலி

இதையடுத்து தட்டம்மையை எதிர்த்து போராடியபடி கொரோனா வைரஸையும் எதிர்த்தார். மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும் அவர் சமூகவலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதன் எதிரொலியாக அந்த குட்டித் தீவில் கொரோனா வைரஸ் எட்டிக் கூட பார்க்கவில்லை.

குவாரன்டைன் மையம்

குவாரன்டைன் மையம்

ஏற்கெனவே தட்டம்மையால் 83 பேர் வரை இறந்த நிலையில் கொரோனா வைரஸை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் செயல்பட்டதால் அங்கு யாருக்கும் வைரஸ் பாதிப்பே இல்லை. அது போல் மற்ற நாடுகளிலிருந்து அந்த தீவுகளுக்குள் நுழைய அனுமதி அளிக்கவில்லை. கடந்த ஜனவரி மாதமே அந்த நாட்டின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே உள்ள ஃபலியோலோ மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட மையம் உருவாக்கப்பட்டது.

நியூஸிலாந்து

நியூஸிலாந்து

அது போல் பிப்ரவரி மாதம் மத்தியில் சீனா, ஹாங்காங் வழியால் வருவோரை சமோவாக்குள் அனுமதிக்கவில்லை. இதெல்லாம் அந்நாட்டு அழகி ஃபோனோவால் சாத்தியமானதாக கூறுகிறார்கள். ஃபோனோ ஏற்கெனவே செவிலியராக பணியாற்றியுள்ளார். அவரது தந்தை பாதிரியார், தாய் மனநல பணியாளராக உள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மிஸ் சமோவாவாக தேர்வு செய்யப்பட்டவுடன் ஃபோனோ நியூஸிலாந்திலிருந்து சமோவாவிற்கு வந்துவிட்டார்.

ஆச்சரியம்

ஆச்சரியம்

அது போல் செயற்கை சுவாச கருவிகளுக்கும் ஃபோனோ ஏற்பாடு செய்து தயார் நிலையில் வைத்துள்ளார். கொரோனா பாதிப்பால் வல்லரசு நாடுகளே திணறி வரும் நிலையில் ஒரு குட்டித் தீவு கொரோனா இல்லாத நாடாக உள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. சமூக வலைதளங்களில் ஃபோனோவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

English summary
Here are the reasons for how a small island Samoa has recorded No Covod Positive patients with the help of a queen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X