For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மரபணு முறையில் கரு உருவாக்கம் தொடர்பான ஆராய்ச்சிக்கு இங்கிலாந்தில் ஒப்புதல் !

By Karthikeyan
Google Oneindia Tamil News

லண்டன்: கரு சிதைவு குறித்து மரபணு முறையில் கரு உருவாக்குதலுக்கு இங்கிலாந்து மனித கருவூட்டம் மற்றும் முளையியல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

தற்போது ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களாலேயே கருச்சிதைவு ஏற்படுகிறது. அவற்றில் ஒன்றான ஆல்கஹால் குடித்தால் கண்டிப்பாக கரு சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆகவே குழந்தை நன்கு ஆரோக்கியமாக வளர வேண்டும் என்று நினைப்பவர்கள், கர்ப்பத்தின் போது ஆல்கஹால் பருகாமல் இருக்க வேண்டும்.

HFEA genetically modify human embryos

இந்நிலையில் லண்டனில் உள்ள பிரான்சிஸ் கிரிக் பல்கலைக் கழக ஆராய்சியாளர்கள் செயற்கை கருவூட்டம் மூலம் மரபணு முறையில் கரு உருவாக்குதல் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். மரபணு மாற்றம், அதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இவர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இதையடுத்து மரபணு முறையில் கரு உருவாக்குதற்கான ஆராய்ச்சியை மேற்கொள்ள இங்கிலாந்து மனித கருவூட்டம் மற்றும் முளையியல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆனால் 14 நாட்கள் மட்டுமே இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆரோக்கியமான மனித கருவை செயற்கை முறையில் கருவூட்டம் செய்வதற்கு இது ஒரு நல்ல ஆராய்ச்சியாக இருக்கும் என்று லண்டன் பல்கலைக்கழக இயக்குநர் பால் நர்ஸ் கூறியுள்ளார்.

மேலும் ஆரம்ப நிலையில் உள்ள கரு உருவாதலைத் தடுக்கும் மரபணு காரணிகளை கண்டு கொண்டு மரபணு திருத்தம் செய்வதற்கு இந்த வகை ஆராய்ச்சி மிகவும் உருதுணையாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

குறையுள்ள மரபணுக்களை திருத்தம் செய்து மரபணு ரீதியாக ஏற்படும் வியாதிகளை தடுக்க கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் பயோமெடிக்கல் ஆராய்ச்சியில் விஞ்ஞானி பெரும் புரட்சியை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The Human Fertilisation and Embryology Authority (HFEA) regulator approved to genetically modify human embryos
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X