For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கரிபால்டி ரயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கத்தில்..வாவ்.. எல்லா ஊரிலும் இப்படி இருந்தா எப்படி இருக்கும்!

இத்தாலியின் மிலன் நகரில் விண்ணை தொடும் அளவுக்கு காடுகள் வளர்ந்துள்ளன.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    இத்தாலியின் மிலன் நகரில் கட்டடங்களில் வளர்க்கப்படும் மரங்கள்-வீடியோ

    மிலன்: இத்தாலியின் மிலன் நகரில் விண்ணை தொடும் கட்டடங்களில் வளர்க்கப்படும் மரங்களால் காற்று மாசுபடுவது தடுக்கப்படுகிறது.

    காடுகள் அழிக்கப்பட்டு அவை குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்படுகின்றன. அவ்வாறு வெட்டப்படும் மரங்களோ அதிக விலைக்கு விற்பனைக்கு செல்கின்றன.

    மரங்கள் இல்லாததால் காற்று மாசுபடுகிறது. இதனால் இந்தியாவில் ஏராளமான மரங்கள் நடப்படுகின்றன. மேலும் மரம் நடுதல் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்நிலையில் காட்டை அழித்து வீட்டை கட்டி வரும் நிலையில் இத்தாலியில் வீட்டின் மேல் காட்டை ஏற்படுத்தியுள்ளனர்.

    காடு

    காடு

    மிலன் நகரில் செங்குத்தாக இரட்டை கட்டடங்கள் உள்ளன. இங்கு 100 வீடுகள் உள்ளன. இதன் பெயர் பாஸ்கோ வெர்டிகலே ஆகும். காற்று மாசுபடுதலை தடுக்க இந்த கட்டடத்தை கட்டிய பொறியாளர்கள் பெரும் திட்டமிடலை செய்து கட்டடங்களுக்குள் காட்டை வளர்க்கும்படி செய்துள்ளனர்.

    செடிகள் வளர்க்கப்படுதல்

    செடிகள் வளர்க்கப்படுதல்

    அதன்படி இந்த அபார்ட்மென்ட்கள் 2014-ஆம் ஆண்டு கட்டப்பட்டவை. இங்கு 800-க்கும் மேற்பட்ட மரங்களும், 4,500 புதர்கள் போன்ற செடிகளும், 15,000 செடிகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன.

    44000 பவுன்ட் கார்பன் டை ஆக்ஸைடு

    44000 பவுன்ட் கார்பன் டை ஆக்ஸைடு

    மரங்கள் மிகவும் எளிதாக கிடைக்கின்றன. மேலும் சிறந்த முறையில் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை கொண்டது. இந்த இரு டவர்களில் உள்ள 20,000 மரங்களும் ஆண்டுக்கு 44000 பவுன்ட் கார்பன் டை ஆக்ஸைடை ஆக்ஸிஜனாக மாற்றுகின்றன.

    3 ஆண்டு ஆராய்ச்சி

    3 ஆண்டு ஆராய்ச்சி

    இவற்றால் வீடுகளும் குளிர்ச்சி அடைய கூடும். சிறிய தூசுகளை வடிகட்டும் தன்மையும் ஒலி மாசுவில் இருந்தும் நம்மை காக்கும். மேலும் காற்று மாசை தடுக்கும் சக்தி மரங்களுக்கு உண்டு. இந்த கட்டடத்தை கட்டியவர் லாரா கட்டி. இவர் அந்த கட்டடத்தில் எந்த மாதிரியான மரங்கள் தாங்கக் கூடிய சக்தி கொண்டவை என்பது குறித்து 3 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தார்.

    மேலும் சில திட்டங்கள்

    இந்த செடிகளுக்கு முறையாக தண்ணீர் இடுவது உரம் இடுவது போன்ற பணிகளும் தினமும் நடைபெறுகிறது. இந்த கட்டடங்களில் நடப்பட்டுள்ள மரங்களை எடுத்து பூமியில் நட்டால் அதற்கு 20,000 சதுர மீட்டர் இடங்கள் தேவைப்படும். அதாவது மூன்றரை பங்கு புட்பால் மைதானத்தின் அளவை போன்றதாகும். இதுபோன்ற வீடுகள் தைவானிலும் டொரன்டோவிலும் பகோடாவிலும் கட்டப்பட்டு வருகின்றன.

    English summary
    These residential twin towers near Milan’s bustling Garibaldi train station are known as Milan's Vertical Forest. The buildings are covered in 800 trees, 4,500 shrubs & 15,000 plants. If planted on the ground, the forest would cover 20,000 sq m – the size of 3.5 football pitches.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X