For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஹிலாரிக்கு இப்படி ஆகிடுச்சே.. பிரசாரங்கள் ரத்து! வைரலாகும் தடுமாற்ற வீடியோ

By Veera Kumar
Google Oneindia Tamil News

நியூயார்க்: தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களுக்கும் குறைவாக உள்ள நிலையில் அமெரிக்க ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கடும் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ஓய்வெடுத்து வருகிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8ம் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் அதிபர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

இருவரும் போட்டி போட்டு தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஹிலாரி கிளிண்டனுக்கு இருமல் தொடர்பான அலர்ஜி இருந்து வருகிறது. அவர் தீவிர உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக, கடந்த மாதம் நடந்த பிரசாரத்தின் போது னால்டு டிரம்ப் தெரிவித்து இருந்தார். ஆனால் ஹிலாரி நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாக அவரது டாக்டர் பர்டாக் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

நினைவு தினம்

நினைவு தினம்

இந்த நிலையில் நேற்று நியூயார்க்கில் வர்த்தக மையம் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. அதில் ஹிலாரி கிளிண்டன் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டது. எனவே, அவரை டாக்டர் பர்டாக் பரிசோதித்தார். அப்போது அவரது உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதாகவும், அதன் காரணமாக நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சியால் காய்ச்சல் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மகள் வீட்டில் ஓய்வு

மகள் வீட்டில் ஓய்வு

எனவே, ஹிலாரி கிளிண்டன் நன்றாக ஓய்வு எடுக்கும் படியும் அறிவுறுத்தினார். அதை தொடர்ந்து அவர் நியூயார்க்கில் உள்ள தனது மகள் செல்சியாவின் வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். இதையடுத்து கலிபோர்னியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசார கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. அவர் 2 நாட்கள் கலிபோர்னியாவில் தங்கி தேர்தல் பிரசாரம் மற்றும் நிதி திரட்டும் கூட்டங்களில் பங்கேற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வைரல் வீடியோ

ஹலாரி கிளிண்டன் தடுமாறியபடி காரில் ஏறும் வீடியோ காட்சி உலகமெங்கும் வைரலாகியுள்ளது. உதவியாளர்கள் கைத்தாங்கலாக ஹிலாரியை வேனுக்கு அழைத்து சென்ற காட்சி அதில் இருந்தது.

வசதியாகிவிட்டது

வசதியாகிவிட்டது

ஹிலாரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது குறித்து எதிர்க்கட்சியான குடியரசு கட்சி தொண்டர்கள் சாதகமாக பயன்படுத்தி பிரசாரம் செய்ய தொடங்கி விட்டனர். உடல்நலக்குறைவால் அவதிப்படும் ஹிலாரி கிளிண்டன் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என தெரிவிக்கின்றனர்.

English summary
After Hillary Clinton was taken to her daughter's apartment in New York, Clinton told reporters she was feeling 'great.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X