For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண்களை மதிக்கும் மனப்பான்மை உலகத் தலைவர்களிடத்தில் தேவை: ஹிலாரி கிளிண்டன்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பெண்களை மதிக்கும் மனப்பான்மை உலகத் தலைவர்களிடத்தில் தேவை என வலியுறுத்தியுள்ளார் ஹிலாரி கிளிண்டன்.

Hillary Clinton to leaders: Help all daughters

அமெரிக்க முன்னாள் அதிபரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக உலக வங்கி சார்பில் வாஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தி்ல் பங்கேற்றார். அப்போது அவர் பெண்களின் கல்வித் தேவை குறித்துப் பேசினார்.

இது தொடர்பாக அந்நிகழ்ச்சியில் மேலும் கூறியதாவது:-

உலகப்புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு அல்லது ஹார்வேர்டு பல்கலைக்கழகங்களில் தங்களது பெண் குழந்தைகள் கல்வி பயில்வதற்கு சென்றால் பெருமிதம் கொள்ளும் உலக தலைவர்கள், அதற்கு அப்பால் அவர்களது கல்வியை பற்றியோ அவர்களது தேவையை பற்றியோ ஏதும் சிந்திப்பதி்ல்லை.

இதன் மூலம் சமூகக் கோட்பாடுகளை உலகத்தலைவர்கள் மதிக்காமல் இருப்பது தெரியவருகிறது. ஆகவே, தலைவர்கள் தங்களது மகள்களின் கல்விக்கு மட்டுமல்ல, தனது நாட்டின் ஒட்டுமொத்த மகள்களுக்காகவும் சி்ந்திக்க வேண்டும்.

பெண்களை மதிக்கும் மனப்பான்மையை உலகத் தலைவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்'என இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

English summary
Hillary Clinton returned Wednesday to one of her favorite subjects, calling for a broader conversation about empowering women and girls, and urging world leaders to think not just of their own daughters but also of their “countries’ daughters.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X