For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடியரசுக் கட்சியின் கோட்டையை தகர்க்கத் துடிக்கும் ஹிலரி க்ளிண்டன்!

By Shankar
Google Oneindia Tamil News

ஃபீனிக்ஸ் (யு.எஸ்): நாடு முழுவதும் ஆதரவு அலை வீசத்தொடங்கியுள்ள நிலையில், ஒஹாயோ, ஃப்ளோரிடா மாநிலங்கள் இல்லாமலே ஹிலரி க்ளிண்டன் அதிபர் ஆவதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

பென்சில்வேனியா, மிஷிகன், விஸ்கான்ஸின், வர்ஜீனியா போன்ற கடும் போட்டி நிலவும் மாநிலங்களில், ஹிலரி முன்னிலையில் இருக்கிறார். இங்கு நடத்தப்பட்டுள்ள கருத்துக் கணிப்புகளில் கணிசமாக முன்னேறி ஹிலரிக்கு வெற்றி நிச்சயம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஃப்ளோரிடாவிலும் ஹிலரி முன்னிலை வகிக்கிறார். ஒஹாயோவில் இருவருக்கும் சமமான நிலை உள்ளது. இந் நிலையில் குடியரசுக்கட்சி வலுவாக உள்ள அரிசோனா, டெக்சாஸ் மாநிலங்களில் ஹிலரி தரப்பு கவனம் செலுத்துகின்றனர்.

Hillary Clinton tries hard to capture Trump's stronghold

ட்ரம்புக்கு எதிராக அரிசோனா ஜான் மெக்கய்ன்

குடியரசுக்கட்சியினரால் மிகவும் மதிக்கப்படும் மூத்த செனட் உறுப்பினரும், முன்னாள் அதிபர் வேட்பாளருமான ஜான் மெக்கய்ன், ட்ரம்புக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டார். மேலும் ட்ரம்புக்கு எதிராக வாக்களிக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

அவருடைய ஆதரவாளர்களும் ட்ரம்புக்கு எதிராக வாக்களிக்கக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள ஹிலரியின் தேர்தல்குழு திட்டமிட்டுள்ளது.

கட்சி பாகுபாடின்றி பெண்கள் வாக்களுகளை அள்ளுவதற்காக, மிஷல் ஒபாமா அங்கே களம் இறங்கியுள்ளார். அவருடைய தேர்தல் பிரச்சார அணுகுமுறைக்கு ஏக வரவேற்ப்பு கிடைத்து வருகிறது.

மாணவர்கள், இளைஞர்களை கவர்வதற்கு பெர்னி சான்டர்ஸ் வந்துள்ளார். உடன் ஹிலரியின் மகள் செல்சி க்ளிண்டனும் வருகை தந்துள்ளார். முக்கிய தலைவர்கள் முகாமிட்டு அரிசோனாவை கைப்பற்றி விட வேண்டும் என்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

டெக்சாஸையும் விடப்போவதில்லை

கடந்த நாற்பது ஆண்டுகளாக ஜனநாயகக் கட்சி அதிபரை தேர்ந்தெடுக்காத குடியரசுக் கட்சியின் கோட்டையாக விளங்கி வருகிறது டெக்சாஸ். புஷ் குடும்பத்தினர் டெக்சாஸை சார்ந்தவர்கள்.

முன்னால் அதிபர்கள் சீனியர் புஷ் ஹூஸ்டனிலும்ம், ஜார்ஜ் டபுள்யு புஷ் டல்லாஸிலும் வசித்து வருகிறார்கள். ஜெப் புஷ்ஷின் மகன் நில கமிஷனராக (Land Commissioner) ஆக வெற்றி பெற்றுள்ளார்.

புஷ் குடும்பத்தின் பகையை உட்கட்சி தேர்தல் ஆரம்பத்திலேயே சம்பாதித்துக் கொண்டார் ட்ரம்ப்.

உட்கட்சி தேர்தலில் ட்ரம்பின் தீவிர எதிரியாக இருந்த செனட்டர் டெட் க்ரூஸும் டெக்சாஸ்தான். இறுதியில் டெட் க்ரூஸ் ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்தாலும், அது உதட்டளவில்தான் என்பது வெளிப்படையாக தெரிந்த ஒன்றாகும்.

புஷ் குடும்பமும். டெட் க்ரூஸூம் ட்ரம்புக்கு ஆதரவாக களம் இறங்காத நிலையில், டெக்சாஸையும் வளைத்து விட ஹிலரி தரப்பு வியூகம் அமைக்கிறார்கள்.

பெரிய நகரங்களான டல்லாஸ், ஹூஸ்டன், ஆஸ்டின், சான் அன்டோனியோ ஆகிய ஊர்களில் ஜனநாயகக் கட்சி செல்வாக்கு உண்டு. கலிஃபோர்னியா, நியூயார்க், சிகாகோ என்று ஜன நாயகக் கட்சியின் கோட்டைகளிலிருந்து டெக்சாஸுக்கு கணிசமானோர் குடிபெயர்ந்த வண்ணம் உள்ளனர். இவர்களுடைய ஆதரவும் தொடர்ந்து கிடைக்க வாய்ப்புள்ளது.

பில் க்ளிண்டன் ஏற்கனவே பல தடவை டெக்சாஸ் வருகை தந்துள்ளார். ஹிலரியும் பிரச்சாரத்திற்கு வந்திருக்கிறார். புஷ் குடும்பத்தின் மறைமுக ஆதரவு கூட கிடைக்கக் கூடும்.

சாதாரண வெற்றி போதாது..வரலாறு போற்றும் மாபெரும் வெற்றியாக இருக்க வேண்டும் என்ற கோணத்தில் ஹிலரியின் தேர்தல் வியூகம் மாறியுள்ளது.

வெற்றி வாய்ப்பு இல்லாத மாநிலங்களில் ஒப்புக்கு சப்பாகவே தேர்தல் வேலைகள் நடைபெறும். ஆனால் ட்ரம்ப் மீதுள்ள அதிருப்தியால், தற்போது நிலவும் குழப்பநிலையை பயன்படுத்தி, குடியரசுக்கட்சியின் கோட்டைகளை தகர்த்து, அக் கட்சியை நிலைகுலைய வைக்கும் முயற்சியாக இது கருதப்படுகிறது.

-இர தினகர்

English summary
Hillary Clinton is trying to uproot Republican party in its strong hold states. They are targeting historical states of Texas and Arizona. Michele Obama, Chelsea Clinton and Bernie Sanders are camping in Arizona and there are other plans for Texas. Will Hillary Clinton’s victory be historical by defeating Republican Party in its own land.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X