For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வடகொரியாவுடன் மோதுவது நமக்குதான் பேராபத்து.. ட்ரம்பை எச்சரிக்கும் ஹிலாரி!

வடகொரியாவுக்கு போர் மிரட்டல் விடுப்பது அமெரிக்காவுக்குதான் பேராபத்து என ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சியோல்: வடகொரியாவுக்கு போர் மிரட்டல் விடுப்பது அமெரிக்காவுக்குதான் பேராபத்து என ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.

வடகொரியா அமெரிக்காவை குறிவைத்து அவ்வப்போது அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. இதனால் உச்சக்கட்ட கோபத்தில் உள்ள அமெரிக்காவும் வடகொரியாவை எச்சரித்து வருகிறது.

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுத சோதனை நடத்திய வடகொரியா மீது அமெரிக்க ஆதரவுடன் ஐநா பொருளாதார தடைவிதித்துள்ளது. இதனால் ஆத்திரம் கொண்டுள்ள வடகொரியா தொடர்ந்து அமெரிக்காவை சீண்டி வருகிறது.

அடிக்கடி வார்த்தைப் போர்

அடிக்கடி வார்த்தைப் போர்

மேலும் இருநாட்டு தலைவர்களும் அடிக்கடி வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த மாதம் 3-ம் தேதி வடகொரியா நடத்திய ஆறாவது பெரிய அணு ஆயுத சோதனையும், ஜப்பானுக்கு மேலே ஏவுகணையை பறக்க விட்ட சம்பவமும் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு வடகொரியா மீதான கோபத்தை அதிகரித்துள்ளது.

வடகொரியாவுடன் மோதுவது ஆபத்து

வடகொரியாவுடன் மோதுவது ஆபத்து

இதனால் இருநாடுகளுக்கும் இடையே அண்மைக் காலமாக போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் வடகொரியாவிற்கு போர் அச்சுறுத்தல் விடுப்பது மிகவும் ஆபத்தானது என்று அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

எந்த பயனும் இல்லை

எந்த பயனும் இல்லை

தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஹிலாரி கிளிண்டன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் வடகொரியா விவகாரத்தில் போரை தொடங்குவதும், ஆவேசமாக பேசுவதாலும் எந்த பயனும் இல்லை என்றார்.

போர் மிரட்டல் ஆபத்து

போர் மிரட்டல் ஆபத்து

வடகொரியாவுக்கு போர் மிரட்டல் விடுப்பது அபாயகரமானது என்றும் ஹிலாரி குறிப்பிட்டார். மேலும் இவ்விவகாரத்தை தொலைநோக்கு பார்வையுடன் கையாள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

எதிர்பாராத நேரத்தில் தாக்குதல்

எதிர்பாராத நேரத்தில் தாக்குதல்

அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் என எந்த நாடாக இருந்தாலும் சரி வடகொரிய விவகாரத்தில் நிதானமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். அணுஆயுதங்களை அதிகளவு கொண்டுள்ள வடகொரியாவுடன் மோதுவது அமெரிக்காவுக்குதான் பேராத்து என்றும் அவர் கூறினார்.

English summary
Hillary Clinton warns trump to do not fight with North Korea. She said in Seoul if we conduct war with North Korea it will be very dangerous for America.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X