For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் தொபுக்கடின்னு குதிக்கப் போகும் ஹில்லாரி கிளிண்டன்

By Siva
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஹில்லாரி கிளிண்டன் வரும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவின் வரலாற்றில் இதுவரை ஒரு பெண் கூட அதிபராக இருந்தது இல்லை. இந்நிலையில் ஒரு பெண்ணை அதிபராக பார்க்க நீங்கள் எல்லாம் விரும்பவில்லையா என்று முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் அமெரிக்க மக்களை கேட்டுள்ளார். 2016ம் ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புகிறார் ஹில்லாரி.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிடுவது பற்றி வரும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை அவர் அறிவிக்க உள்ளாராம். தேர்தலில் போட்டியிடுவதை அறிவித்த கையோடு பிரச்சாரப் பயணத்தை துவங்குகிறார் ஹில்லாரி.

Hillary Clinton will announce her 2016 campaign this weekend

அதிபர் தேர்தலில் ஹில்லாரி போட்டியிட்டால் அவர் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் என்று கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. அவர் நியூயார்க் நகரில் உள்ள ப்ருக்ளின் பகுதியில் தேர்தல் பணிகள் தலைமை அலுவலகத்தை அமைக்க இடத்தை லீசுக்கு எடுத்துள்ளார். மேலும் தேர்தல் பணி செய்ய ஆட்களையும் வேலைக்கு எடுத்துள்ளார்.

இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க வரலாற்றில் புதிய சாதனை படைக்க வேண்டும் என்ற துடிப்புடன் உள்ளார் ஹில்லாரி என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Hillary Clinton is likely to announce her 2016 presidential bid on saturday or sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X