For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரலாறு படைத்த ஹில்லாரி கிளிண்டன்: ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹில்லாரி தேர்வு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய அதிபரை தேர்வு செய்ய வரும் நவம்பர் மாதம் 8ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.

Hillary Clinton wins democratic presidential nomination

ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் பிலடெல்பியாவில் நடந்த கட்சி கூட்டத்தில் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹில்லாரியை அதிபர் வேட்பாளர் ஆக்குவது என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து ஆளும் ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஹில்லாரி கிளிண்டன் அறிவிக்கப்பட்டுள்ளார். முக்கிய கட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை ஹில்லாரி பெற்றுள்ளார்.

இந்நிலையில் டொனால்டு டிரம்புக்கும், ஹில்லாரிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் ஹில்லாரி வெற்றி பெற்றால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற வரலாறு படைப்பார். ஹில்லாரிக்கு ஒபாமாவின் முழு ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Former first lady Hillary Clinton has made history by winning democratic presidential nomination.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X