For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொலரடோவில் இந்து கோவில் மற்றும் கலாச்சார மையம் திறப்பு

By Siva
Google Oneindia Tamil News

கொலரடோ: அமெரிக்காவின் கொலரடோ மாநிலத்தில் கட்டப்பபட்டுள்ள இந்து கோவில் மற்றும் கலாச்சார மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள கொலரடோ மாநிலத்தில் இந்து கோவில் மற்றும் கலாச்சார மையம் கடந்த மார்ச் மாதம் முதல் கட்டப்பட்டு வந்தது. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து அதை முறைப்படும் திறந்து வைக்க திட்டமிடப்பட்டது.

இ ந்நிலையில் கடந்த 7ம் தேதி கோவில் திறந்து வைக்கப்பட்டது. கோவில் திறப்பு விழாவில் அமெரிக்காவில் வசிக்கும் இரண்டு அர்ச்சர்கர்கள் மற்றும் இந்தியாவில் இருந்து சென்ற 7 அர்ச்சகர்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்கள் ஓதினர்.

இந்து முறைப்படி ஆரத்தி, ஆராதனை, யாகம், கும்பாபிஷேகம் உள்ளிட்டவை சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த இடம் கோவிலாக மட்டும் அல்லாமல் கலாச்சார மையமாகவும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில் திறப்பு விழாவில் கொலரடோவில் வசிக்கும் ஏராளமான இந்துக்கள் கலந்து கொண்டனர்.

கோவிலில் ஐயப்பன், விநாயகர், துர்கை, கௌரிசங்கர், லட்சுமிநாராயண், ராதாகிருஷ்ணா, ராமர் தர்பார், சரஸ்வதி, சிவலிங்கம், நந்தி, சிவ பரிகாரங்கள், திருப்பதி வெங்கடாசலபதி ஆகிய சாமிகள் உள்ளன.

English summary
Hindu temple and cultural centre has been opened in the US state of Colarado on june 7th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X