For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்து கோயிலை அடித்து நொறுங்கி, தீ வைத்த பாக். இஸ்லாமியர்கள்... கொந்தளிக்கும் இந்து அமைப்புகள்

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டிலுள்ள இந்து கோயில் ஒன்று இடிக்கப்பட்டு, தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வா தலைநகர் பெஷாவரில் இருந்து தெற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாவட்டம் கரக்.

என்னோட கனவு நனவாகவே ஆகாதா?.. ராமதாஸ் வருத்தம்.. பாமகவினர் ஆறுதல்என்னோட கனவு நனவாகவே ஆகாதா?.. ராமதாஸ் வருத்தம்.. பாமகவினர் ஆறுதல்

 இந்து கோயில் இடிப்பு

இந்து கோயில் இடிப்பு

இங்குள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் இந்து கோயில் ஒன்றை அப்பகுதி இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்து அடித்து நொறுங்கியுள்ளனர். மேலும். அந்தக் கோயிலுக்குத் தீயும் வைத்துள்ளனர். நூற்றுக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் கோயிலுக்கு இடித்து தீ வைக்கும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

 இஸ்லாமிய மதகுருமார்கள் காரணம்

இஸ்லாமிய மதகுருமார்கள் காரணம்

இது குறித்து அப்பகுதி ஆய்வாளர் இர்பானுல்லா கான், "இப்பகுதியிலுள்ள இஸ்லாமிய மதகுருமார்களால் தூண்டப்பட்ட சுமார் 1,200 இஸ்லாமியர்கள் இங்கிருக்கும் இந்து கோயிலை இடிக்க முயன்றுள்ளனர். இந்தக் கோயில் நீண்ட ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இல்லை. இருப்பினும், சமீபத்தில் இக்கோயிலைப் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது முதலே இங்குள்ள இந்து-முஸ்லீம்களுக்கு இடையே கோயில் தொடர்பான பிரச்சினை அதிகரித்தது. இது தொடர்பாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோக்களைக் கொண்டு மற்றவர்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து வருகிறோம்" என்றார்.

 இந்துக்கள் மீது தொடரும் தாக்குதல்

இந்துக்கள் மீது தொடரும் தாக்குதல்

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் 97% மக்கள் இஸ்லாமியர்கள், மீதமிருக்கும் 2% மட்டுமே இந்துக்கள். அங்கு மத சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடும் வன்முறையும் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மாத தொடக்கத்தில், மத சுதந்திர மீறல்கள் அதிகம் நடைபெறும் நாடுகளுக்கான பட்டியலில் பாகிஸ்தானை அமெரிக்கா சேர்த்தது.

 கடும் நடவடிக்கை

கடும் நடவடிக்கை

கைபர் பக்துன்க்வா மாகாண தகவல் தொடர்பு அமைச்சர் கம்ரான் பங்காஷ், "இத்தாக்குதல் குறித்து வெளியாகும் செய்திகள் உண்மையானவை தான். நாங்கள் மத சுதந்திரத்தை நம்புகிறோம். கோயில் இடிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

 இடிப்பதே நோக்கம்

இடிப்பதே நோக்கம்

இஸ்லாமிய மதகுருக்களின் உரைக்குப் பின்னரே அந்தக் கூட்டம் கோயிலை நோக்கிச் சென்றதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர் அவர்கள் கோயிலை இடிக்கத் தயார் நிலையிலேயே சென்றனர். சுத்தியல் மற்றும் எண்ணெய் கேன்களை அவர்கள் எடுத்துச் சென்றனர் என்றும் கிராம கூறினர்.

 அதிகரிக்கும் தாக்குதல்

அதிகரிக்கும் தாக்குதல்

இத்தாக்குதல் குறித்து இந்து உரிமை ஆர்வலர் கபில் தேவ், "பாகிஸ்தானில் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது இது முதல் முறை அல்ல. துரதிர்ஷ்டவசமாக மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பாக்கிஸ்தானில் அதிகரித்து வருகிறது. எங்கள் வழிபாட்டுத் தலங்கள் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடைபெறுகின்றன" என்றார்

English summary
Hundreds of Muslims attacked and set fire to a Hindu temple in northwest Pakistan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X