For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'இந்துக்கள் எல்லாம் எதிரிகள்'... சட்டமன்றத்தில் பாக். எம்எல்ஏ ஆவேச பேச்சு

Google Oneindia Tamil News

பெஷாவர்: பாகிஸ்தானில் கைபர் மாகாண சட்டமன்ற கூட்டத்தில் 'இந்துக்கள் எல்லாம் எதிரிகள்' என ஒரு எம்எல்ஏ ஆவேசமாக பேசினார். இதற்கு அங்கிருந்த இந்து எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

பாகிஸ்தானில் கைபர் எல்லைப்புற மாகாண சட்டமன்றத்தில் 124 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இதில் 99 பேர் பொது(முஸ்லிம்கள்), 22 இடங்கள் பெண்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு உள்ளது. 3 இடங்கள் முஸ்லீம் அல்லாதோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

 Hindus are our enemy: Paksitan lawmaker says in assembly

இந்நிலையில் கைபர் மாகாண சட்டமன்ற கூட்டம் அண்மையில் நடந்தது. அப்போது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எம்எல்ஏ ஷர் அஹம் வசீர் புல்வாமா தாக்குதல் விவகாரத்தை குறிப்பிட்டு பேசுகையில், "இந்துக்கள் எல்லாம் நம் எதிரிகள்" என ஆவேசமாக பேசினார். அப்போது அங்கிருந்த இந்து எம்எல்ஏக்கள் ரவி குமார், ரஞ்சித் சிங், ஆகியார் எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து தனது வார்த்தைகளுக்காக மன்னிப்பு கேட்ட வசீர், நான் இங்கு உள்ள இந்துக்களை குறிப்பிடவில்லை. இந்துஸ்தானில் (இந்தியா) உள்ளவர்களை சொல்வதற்காக குறிப்பிட்டேன் என்றார்.

உ.பி. தேர்தலில் காங். தனித்து நின்றால்... பாஜகவுக்கு 14 சீட்டு லாபம்... பிரணாய் ராய் கணிப்பு உ.பி. தேர்தலில் காங். தனித்து நின்றால்... பாஜகவுக்கு 14 சீட்டு லாபம்... பிரணாய் ராய் கணிப்பு

முன்னதாக இந்த விவகாரத்துக்காக சட்டமன்றத்தில் இந்து எம்எல்ஏக்கள் ரவிகுமார் ரஞ்சித் குமார் ஆகியோர் போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய ரஞ்சித் குமார், இந்தியாவில் மட்டுமே இந்துக்கள் இருப்பதாக உறுப்பினர் வசீர் நினைக்க வேண்டாம் என்றார். மேலும் வசீரினை அப்படிபேச சட்டமன்ற சபாநாயகர் முஸ்டாக் கனி ஊக்குவித்ததாகவும் குற்றம்சாட்டினார்.

English summary
Pakistan mla Sher Azam Wazir, in his address in the assembly, said that 'Hindus are our enemy'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X