For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மண்டை ஓடு மாற்று அறுவை சிகிச்சை – அமெரிக்க மருத்துவர்கள் சாதனை!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் தலையின் முன்பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு மண்டை ஓட்டில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர் மருத்துவர்கள்.

அமெரிக்காவின் ஹூஸ்டனை சேர்ந்தவர் ஜேம்ஸ் பாய்சென். கணினியியல் வல்லுனரான இவரது மண்டை ஓட்டின் முன்பகுதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டது.

அதற்காக பல்வேறு அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தொடர் சிகிச்சையால் அப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து மண்டை ஓடு மற்றும் தலையின் முன் பகுதியை மாற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.

Historic Skull and Scalp Transplant Performed in Texas

இதை தொடர்ந்து ஜேம்ஸ் பாய்சென்னுக்கு இறந்தவரிடம் இருந்து தானமாக பெற்ற மண்டை ஓடு மற்றும் தலையின் முன்பகுதி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. தற்போது அவை சீராக செயல்படுகிறது.

அதைதொடர்ந்து அவரது போட்டோவை இந்த அறுவை சிகிச்சையை செய்த ஆண்டர்சன் புற்றுநோய் மையம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் உலகிலேயே உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் மூலம் மண்டை ஓடு பெற்ற முதல் நபர் என்ற பெருமையை ஜேம்ஸ் பாய்சென் பெற்றுள்ளார்.

ஏற்கனவே இவருக்கு சிறுநீரகம், கணையம் ஆகிய உறுப்புகளும் மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் பெற்றுள்ளார். தற்போது அவற்றுடன் மண்டை ஓடு மற்றும் தலையின் முன் பகுதியும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
A man whose cancer left him with severe damage to the top of the head has received what his doctors in Houston describe as the first skull and scalp transplant, the MD Anderson Cancer Center said on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X