For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தற்கொலை செய்யவில்லை ஹிட்லர்... 95 வயது வரை வாழ்ந்ததாக பரபரப்புத் தகவல்!

Google Oneindia Tamil News

பெர்லின்: 2ம் உலகப் போரின் இறுதியில், 1945ம் ஆண்டு பெர்லின் பாதாள அறைக்குள் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு ஹிட்லர் செத்துப் போனார் என்பதுதான் இதுவரை நாம் வரலாறாக படித்து வந்தது.. ஆனால் ஹிட்லர் சாகவில்லை, தப்பிப் போய் விட்டார்.. 1984ம் ஆண்டு வரை அவர் உயிர் வாழ்ந்தார். தனது 95வது வயதில்தான் இயற்கையாக அவர் மரணமடைந்தார் என்று ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார் ஒரு நூலாசிரியர்.

ஹிட்லர் தனது வாழ்நாளின் கடைசிக் காலத்தை பிரேசிலில் கழித்தார் என்று கூடுதல் பரபரப்பையும் அவர் கிளப்பி விட்டுள்ளார்.

அதை விட முக்கியமானது, அவர் பெர்லினை விட்டுத் தப்பிச் சென்ற பின்னர் ஒரு கருப்பர் இனப் பெண்ணுடன் காதல் கொண்டு அவருடன் சில காலம் வாழ்ந்தார் என்பதுதான்.

சிமோனி ரெனீ குரேரியோ என்ற முதுகலை மாணவிதான் Hitler in Brazil - His Life and His Death, என்ற நூலில் இந்த தகவல்களை தனது நூலில் எழுதியுள்ளார். இந்த மாணவி பிரேசிலைச் சேர்ந்தவர்.

மறக்க முடியாத ஹிட்லர்

மறக்க முடியாத ஹிட்லர்

சரித்திரத்தில் மறக்க முடியாத சர்வாதிகாரி ஹிட்லர். அவரது பயங்கர முகத்தை அனைவரும் பார்த்துள்ளனர். அதேசமயம் அவருக்குள் இருந்த பல சுவாரஸ்யங்களையும் உலகம் படித்தறிந்துள்ளது.

பெர்லினோடு முடியவில்லை ஹிட்லர் சகாப்தம்...

பெர்லினோடு முடியவில்லை ஹிட்லர் சகாப்தம்...

ஹிட்லரின் சகாப்தம் பெர்லின் பதுங்கு குழியோடு முடியவில்லை என்பதுதான் தற்போது லேட்டஸ்டாக வெளியாகியுள்ள பரபரப்பு. மாறாக அவர் பெர்லினை விட்டு தப்பி ஓடி, 1984ம் ஆண்டு வரை உயிர் வாழ்ந்தார் என்று இந்த புதிய புத்தகம் தெரிவிக்கிறது.

ஜெர்மனி தோற்றதும்...

ஜெர்மனி தோற்றதும்...

2ம் உலகப் போரில் ஜெர்மனி வீழ்ந்ததை அறிந்த ஹிட்லர் உடனடியாக தப்பி ஓடி விட்டாராம். ஜெர்மனியை விட்டு வெளியேறிய அவர் பல நாடுகளுக்கும் மாறு வேடத்தில் போயுள்ளார்.

தென் அமெரிக்க நாடுகளில்

தென் அமெரிக்க நாடுகளில்

அர்ஜென்டினா போயுள்ளார், பராகுவே போயுள்ளார். கடைசியாக பிரேசில் வந்து சேர்ந்துள்ளார்.

ரகசியப் பொக்கிஷத்தைத் தேடி

ரகசியப் பொக்கிஷத்தைத் தேடி

அவரது இந்த தென் அமெரிக்க நாடுகளின் பயணத்திற்கு இன்னொரு காரணம் சொல்லப்படுகிறது. அதாவது இந்த நாடுகளில் ஹிட்லர் மற்றும் அவரது கூட்டு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பல அரிய பொக்கிஷங்களை மறைத்து வைத்துள்ளனர். அதைத் தேடித்தான் ஹிட்லர் போனதாக சொல்கிறார்கள்.

பொலிவிய எல்லையில்

பொலிவிய எல்லையில்

பிரேசில், பொலிவியா நாடுகளுக்கிடையிலான எல்லைப் பகுதியில் பிரேசிலுக்குட்பட்ட மாடோ கிராஸ்ஸோ என்ற மாகாணத்தில்தான் தலைமறைவாக 1984ம் ஆண்டு வரை வாழ்ந்துள்ளார் ஹிட்லர்.

95 வயதில் மரணம்

95 வயதில் மரணம்

தனது 95வது வயதில் இயற்கையான முறையில் மரணத்தைச் சந்தித்துள்ளார் ஹிட்லர் என்கிறது இந்த நூல்.

ஹிட்லரின் மனம் கவர்ந்த குட்டிங்கா

ஹிட்லரின் மனம் கவர்ந்த குட்டிங்கா

இந்த நாடோடிப் பயணத்தின்போது அவருக்கும், கருப்பர் இனத்தைச் சேர்ந்த குட்டிங்கா என்ற பெண்ணுக்கும் இடையே நட்பும், காதலும், உறவும் ஏற்பட்டதாம்.

அடோல்ப் லிப்ஸிக் என்ற பெயரில்

அடோல்ப் லிப்ஸிக் என்ற பெயரில்

பிரேசிலுக்குத் தப்பி வந்த ஹிட்லர் தனது பெயரை அடோல்ப் லிப்ஸிக் என்று மாற்றிக் கொண்டு வாழ்ந்ததாக ரெனீ கூறுகிறார். அவர் வாழ்ந்த நகரத்தின் பெயர் நோஸா சன்ஹோரா.

ஜெர்மனி தாத்தா

ஜெர்மனி தாத்தா

ஹிட்லரை அங்குள்ளவர்கள் ஜெர்மனியைச் சேர்ந்த தாத்தா என்று அழைத்து வந்துள்ளனராம்.

டிஎன்ஏ சோதனை

டிஎன்ஏ சோதனை

தற்போது அடோல்ப் லிப்ஸிக்கின் மிச்சத்தைத் தோண்டி எடுத்து டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்த சிமோனிக்கு அரசு அனுமதி கிடைத்துள்ளதாம். இதையடுத்து இஸ்ரேலில் வசித்து வரும் ஹிட்லரின் உறவுக்காரர் ஒருவரின் டிஎன்ஏவுடன், லிப்ஸிக்கின் டிஎன்ஏவைப் பரிசோதிக்கவுள்ளாராம்.

லிப்ஸிக் என்றால் என்ன...?

லிப்ஸிக் என்றால் என்ன...?

ஹிட்லர் தனது பெயரை லிப்ஸிக் மாற்றியதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார் சிமோனி. அதாவது ஹிட்லருக்கு மிகப் பிடித்த இசை மேதை பாக். அவர் பிறந்த ஊர்தான் லிப்ஸிக். எனவேதான் அந்தப் பெயரை தனது மாறுவேடப் பெயராக மாற்றிக் கொண்டாராம் ஹிட்லர்.

தலையைச் சுத்தி வருதே சிமோனி சொல்வதைப் பார்த்தால்....!

English summary
Author has been given permission to exhume remains of one Adolf Leipzig, who she claims was actually Hitler, for DNA tests Adolf Hitler is believed to have died after shooting himself in a Berlin bunker in 1945 when he realised Germany had lost World War II. But a new book claims he escaped his hideout and died incognito in 1984 in a town near Brazil's border with Bolivia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X