For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாழ வீடில்லை.. சாப்பாட்டுக்கு வழியில்லை.. பக்காவா ப்ளான் பண்ணி ஜெயிலுக்கு போன முன்னாள் விஞ்ஞானி!

Google Oneindia Tamil News

பெர்லின்: வீடில்லாமல் கஷ்டப்பட்டு வந்த முதியவர் ஒருவர் திட்டமிட்டு ஒருவரை தாக்கி சிறை சென்ற சம்பவம் ஜெர்மனியில் நடந்துள்ளது.

சம்பந்தப்பட்ட அந்த முதியவர் கனிணி அறிவியல் துறையில் விஞ்ஞானியாக இருந்தவர். ஒருகட்டத்தில் அவரது வேலை பறிபோய்விட்டதால் மிகவும் வறுமையான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.

homeless an gets life prisonment- or attacking cyclist

தங்குவதற்கு வீடு கூட இல்லாமல் அவதிப்பட்டு வந்த அவர், ஒரு பழைய காரில் வசித்து வந்தார். இதனால் அவர் ஏதாவது தவறு செய்துவிட்டு, சிறைச்சாலைக்கு செல்வதென முடிவு செய்தார்.

இதையடுத்து அந்த முதியவர் தனது காரை, சைக்கிள் ஓட்டி ஒருவர் மீது வேண்டும் என்றே மோதினார். இதில் அந்த சைக்கிள் ஓட்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த முதியவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

எச்சு ராஜா ஒரு பைத்தியக்காரார்.. அறிவுடையவர்கள் அப்படி பேசமாட்டார்கள்.. கடுமையாக விளாசிய குஷ்பு! எச்சு ராஜா ஒரு பைத்தியக்காரார்.. அறிவுடையவர்கள் அப்படி பேசமாட்டார்கள்.. கடுமையாக விளாசிய குஷ்பு!

வழக்கை விசாரித்த ஓல்டன்பர்க் நீதிமன்ற நீதிபதிகள், 62 வயதாகும் அந்த முதியவரின் எண்ணத்தை அறிந்துகொண்டனர். இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், அந்த முதியவரின் செயல்பாடு கொலை முயற்சிக்கு இணையானது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த முதியவர் தனது ஓய்வூதிய தொகையை விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக நீதிமன்ற செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

English summary
An unemployed man who was living out of his car has been given life in jail by a German court for deliberately knocking down a cyclist in an attempt to get a prison sentence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X