For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

”ஹோமோ நலெடி” - இவர்கள்தான் நம்முடைய மூதாதையர்களாம்; ஆப்ரிக்காவில் கண்டுபிடிப்பு!

Google Oneindia Tamil News

ஜோகன்னஸ்பர்க்: ஆப்ரிக்காவின் குகை ஒன்றில் மனிதனையொத்த உயிரினங்களின் தொல் படிமங்கள் அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. அவை மனிதர்களின் முன்னோர்களாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்பாக கிடைத்த தகவலையடுத்து தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரருகில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட விஞ்ஞானிகள் அங்குள்ள குகையொன்றில் இதுவரை நமக்குத் தெரியவராத மனிதனை ஒத்த உயிரினம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

மனித பரிணாம வளர்ச்சியில் இது மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு என்று அவர்கள் தெரிவித்தனர்.

நம்முடைய மூதாதையர்களான நலெடி:

நம்முடைய மூதாதையர்களான நலெடி:

செஸோதோ மொழியில் இந்த இனத்திற்கு நலெடி அதாவது நட்சத்திரம் என்று பெயர். சுமார் 3 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த, மனித இனத்தின் மூதாதையர்களில் ஒன்று இந்த இனம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

15 சிதைவுகள் கண்டுபிடிப்பு:

15 சிதைவுகள் கண்டுபிடிப்பு:

இந்தக் குகையில் புதைக்கப்படுவதற்கான இடமாக இருந்திருக்கக்கூடிய ஆழமான நிலவறை ஒன்றில் இருந்து பதினைந்து உடற்பாக எலும்புகளின் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

படிகமானுடவியலாளர்கள் குழு:

படிகமானுடவியலாளர்கள் குழு:

ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள விட்வடர்ஸ்ரேண்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், அமெரிக்காவைச் சேர்ந்த படிமமானுடவியலாளரான லீ பெர்கர், என்பவரது தலைமையில் 60 ஆய்வாளர்கள் இங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

அதிகமான கண்டுபிடிப்புகள்:

அதிகமான கண்டுபிடிப்புகள்:

15 உடற்பாகங்கள் தவிர, மேலும் 1,550 படிம உறுப்புகளும் இந்த அகழ்வாய்வில் கிடைத்துள்ளது. உலகில் இதுவரையிலான அகழ்வாய்வில் கிடைத்ததிலேயே இதுதான் மிகவும் அதிகம் என்று கூறப்படுகிறது.

ஆயிரக்கணக்கில் கிடைக்க வாய்ப்புண்டு:

ஆயிரக்கணக்கில் கிடைக்க வாய்ப்புண்டு:

இந்த பகுதியில் மேலும் ஆயிரக்கணக்கில் இந்த இனத்தின் படிமங்கள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது என ஆய்வுக்குழு தலைவர் லீ பெர்கர் தெரிவித்துள்ளார்.

English summary
Acting on a tip from spelunkers two years ago, scientists in South Africa discovered what the cavers had only dimly glimpsed through a crack in a limestone wall deep in the Rising Star Cave: lots and lots of old bones.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X