For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாவ்... நச், நச் கலரில் ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள்... ஜெர்மனியில் பிரமாண்ட பேரணி

Google Oneindia Tamil News

பெர்லின்: ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்து ஜெர்மனியில் நடந்த பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

27 நாடுகளில் ஓரினச் சேர்க்கை என்பது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதில், நெதர்லாந்தில் 2000 ஆவது ஆண்டு ஓரினச் சேர்க்கை திருமணம் என்பது அங்கீகரிக்கப்பட்டது.

2001 ஆம் ஆண்டில் அந்த நாட்டின் நான்கு ஓரினச்சேர்க்கை ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். உலகில் முதல் முறையாக அங்கீகரிக்கப்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணமாக இது பார்க்கப்படுகிறது.

வேலூர்: ஜாதி சங்க கட்சி நிர்வாகிகளை வளைத்துப் போட்ட ஏ.சி.சண்முகம்... திமுக தலைமை ஷாக்வேலூர்: ஜாதி சங்க கட்சி நிர்வாகிகளை வளைத்துப் போட்ட ஏ.சி.சண்முகம்... திமுக தலைமை ஷாக்

#LoveWins ஹேஷ்டேக்

#LoveWins ஹேஷ்டேக்

இதேபோன்று, 2015 ஆம் ஆண்டு உலகின் பெரிய அண்ணன் அமெரிக்காவிலும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது #LoveWins என்ற ஹேஷ்டேக் உலகமெங்கும் டிரெண்ட் ஆனது நினைவிற்குரியது.

திருமணத்திற்கு அங்கீகாரம்

திருமணத்திற்கு அங்கீகாரம்

2015ஆம் ஆண்டு அயர்லாந்து, பின்லாந்து, கிரீன்லாந்து ஆகிய நாடுகளிலும், 2016 ஆம் ஆண்டு கொலம்பியா நாட்டிலும், 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

பேரணி

பேரணி

இந்தநிலையில், தலைநகர் பெர்லினில் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக உள்ள வானவில்-லின் நிறக் கொடியுடன் ஆடைகளை அணிந்தும் பல்வேறு விலங்குகள், பறவைகள் போன்று வேடமிட்டும் ஏராளமானோர் பேரணியில் பங்கேற்றனர்.

50-வது ஆண்டு

50-வது ஆண்டு

தன்பாலின கொள்கைக்கு ஆதரவளிப்பதன் மூலம் பாலியல் ரீதியான குற்றங்கள் குறையும் என்று பேரணியில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக வெளிப்படையான பேரணி நடந்து 50வது ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இந்த ஊர்வலம் நடத்தப்படுவதாக அதில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

English summary
Homosexual Supporters Rally in Germany. More than a thousand people participated.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X