For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக உச்சகட்ட போராட்டம்... இன்னொரு 'தியான்மென்' ஆக விஸ்வரூபம்?

Google Oneindia Tamil News

Recommended Video

    ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக உச்சகட்ட போராட்டம்...வீடியோ

    ஹாங்காங்: குற்றவாளிகளை சீனா, தைவானிடம் ஒப்படைக்கும் சட்ட திருத்தத்துக்கு எதிராக ஹாங்காங்கில் உச்சகட்ட போராட்டம் தொடருகிறது. இந்த போராட்டத்தை ஒடுக்க ஹாங்காங் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    பிரிட்டனின் காலனி நாடாக இருந்த ஹாங்காங், 1997-ல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும் சீனாவின் ஒரு மாகாணமாக இல்லாமல் சுதந்திரமான ஒரு அரசாங்கமாக ஹாங்காங் செயல்பட்டு வருகிறது.

    Hong Kong Protest continue over extradition bill

    ஹாங்காங்குக்கு தனிச் சட்டம் இருந்தாலும் முழுமையாக ஜனநாயகம் கோரி 2014-ல் பெரும் போராட்டம் வெடித்தது. அதேபோல் தற்போது குற்றவாளிகளை சீனா,தைவானிடம் ஒப்படைக்கும் சட்ட திருத்தத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    விவசாயிகளின் கண்ணீரை துடைத்த அமிதாப் பச்சன்... கடன்சுமையை ஏற்றுக் கொண்டார் விவசாயிகளின் கண்ணீரை துடைத்த அமிதாப் பச்சன்... கடன்சுமையை ஏற்றுக் கொண்டார்

    இச்சட்ட திருத்தம் மூலம் அரசியல் எதிரிகளை ஹாங்காங் அரசு பழிவாங்கக் கூடும் என்பது போராட்டக்காரர்களின் குற்றச்சாட்டு. அரசின் புதிய சட்ட திருத்தத்துக்கு எதிராக அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டங்கள் தொடருகின்றன.

    Hong Kong Protest continue over extradition bill

    இதனால் போலீசார் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு இடையே ஆங்காங்கே மோதல்களும் வெடித்துள்ளன. ஆனால் போராட்டம் உக்கிரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைக்கு இந்த போராட்டம் ஓய்வதாகவும் இல்லை. அரசு அலுவலகங்கள் பெரும்பாலானவை மூடப்பட்டுள்ளன.

    Hong Kong Protest continue over extradition bill

    1989-ல் சீனாவின் தியான்மென் சதுக்கத்தில் ஜனநாயகம் கோரி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அந்த மாணவர்களை சீனா அரசு சுட்டுப் படுகொலை செய்தது. மொத்தம் 3000-க்கும் அதிகமான மாணவர்கள் கொல்லப்பட்டனர். ஹாங்காங்கின் தற்போதைய நிலை இன்னொரு தியான்மென் சதுக்க நிகழ்வை உருவாக்குமோ? என ஜனநாயகவாதிகள் அஞ்சுகின்றனர்.

    English summary
    Hong Kong activist's Protest continue over the extradition bill.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X