For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமைதியாக நடந்து வந்த ஹாங்காங் போராட்டத்தில் கலவரம்.. களமிறங்கிய ராணுவம்.. சீனா அத்துமீறல்!

அமைதியாக நடந்து வந்த ஹாங்காங் போராட்டத்தில் கலவரம் வெடித்துள்ளது.

Google Oneindia Tamil News

ஹாங்காங்: அமைதியாக நடந்து வந்த ஹாங்காங் போராட்டத்தில் கலவரம் வெடித்துள்ளது.
ஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது போலீசார் மற்றும் ராணுவத்தினர் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

சீனாவின் அதிகாரத்திற்கு ஹாங்காங் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த வாரமே வாபஸ் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போராட்டம் தொடர்ந்து நடந்து வருவது சீனாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஹாங்காங் சிறப்பு அதிகாரத்தை நீக்கிவிட்டு மொத்தமாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சீனா முயன்று கொண்டு இருக்கிறது.

Hong Kong youths protest turn into violence: Army deployed in many places

சீனாவில் புதிதாக நாடுகடத்தல் சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள். கடந்த ஜூன் மாதம் இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை ஹாங்காங்கில் கொண்டு வர சீனா முயன்று அந்த மசோதாவை தாக்கல் செய்தது.

இதன் மூலம் ஹாங்காங்கில் இருக்கும் யாரை வேண்டுமானாலும் எளிதாக நாடு கடத்த முடியும். இதற்கு எதிராகத்தான் அங்கு மக்கள் தினமும் போராட்டம் செய்து வருகிறார்கள். இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அந்த சர்ச்சைக்குரிய நாடு கடத்தல் மசோதாவை திரும்ப பெறுவதாக சீனாவும், ஹாங்காங்கும் அறிவித்தது.

எங்கள் கையில் எதுவும் இல்லை.. இம்ரான் கான் பயன்படுத்திய அந்த வார்த்தை.. இந்தியாவிற்கு வார்னிங்!எங்கள் கையில் எதுவும் இல்லை.. இம்ரான் கான் பயன்படுத்திய அந்த வார்த்தை.. இந்தியாவிற்கு வார்னிங்!

ஆனால் மேலும் நான்கு கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளது. மொத்தம் போராட்டம் செய்பவர்கள் ஐந்து கோரிக்கையை வைத்துள்ளனர். அதில் முதல் கோரிக்கை போக ,

Hong Kong youths protest turn into violence: Army deployed in many places

1. மொத்தமாக ஹாங்காங்கிற்கு முழு அதிகாரம் அளிக்க வேண்டும்.

2. கலவரம் செய்தோம் என்ற வார்த்தையை புகாரில் இருந்து நீக்க வேண்டும்.

3. போராட்டத்தில் போலீஸ் செய்த அத்துமீறலை விசாரிக்க வேண்டும்.

4. ஹாங்காங் ஆட்சியாளர் கேரி லாம் பதவி விலக வேண்டும். புதிதாக தேர்தல் நடத்த வேண்டும், ஆகிய கோரிக்கைகளை இன்னும் ஹாங்காங் அரசு நிறைவேற்றவில்லை.

இதனால் அங்கு தொடர்ந்து இளைஞர்கள் போராடி வருகிறார்கள். தற்போது ஹாங்காங்கில் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது.முதலில் காலையில் பிரிட்டிஷ் தூதரகம் வெளியே அமைதியான முறையில் போராட்டம் நடந்தது.

ஆனால் போக போக இதில் கலவரத்தில் முடிந்தது. இளைஞர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதனால், தற்போது போலீசார் அவர்கள் மீது லத்தி தாக்குதல் நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இதனால் அமைதியாக நடந்து வந்த போராட்டத்தில் கலவரம் வெடித்துள்ளது. ஹாங்காங் போராட்டத்தில் இதுவரை 1100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Hong Kong youths protest turn into violence: Army deployed in many major places.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X