For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹாங்காங்கில் போராட்டத்தில் மீண்டும் வன்முறை.. தண்ணீர் பீய்ச்சி அடித்த போலீஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஹாங்காங்கில் கலக்கும் கருப்பு ஹீரோக்கள்.. சீனாவை கலங்கடிக்கும் வீடியோ!

    ஹாங்காங்: ஹாங்காங்கில் அரசின் தடையை மீறி போராட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது . இதில் பலர் காயமடைந்தனர்.

    ஹாங்காங்ரில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணை செய்யும் விதமாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அதன் அரசு முடிவு செய்தது.

    HongKong protestors involve in violence

    எனினும் இந்த சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் வழக்குப் பதிவும் செய்யக் கூடாது என வலியுறுத்தியும் 2 மாதங்களுக்கு மேலாக மக்கள் தொடர்ந்து போராட்டம் செய்து வந்தனர்.

    இதையடுத்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதிலிருந்து பின்வாங்கிய ஹாங்காங் அரசு சர்ச்சைக்குரிய சட்டத்தை ரத்து செய்தது. எனினும் ஹாங்காங்கில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இவங்க சொல் பேச்சே கேட்கமாட்டாங்களா.. திரும்ப எப்டி போட்டோ எடுத்திருக்காங்க பாருங்க!இவங்க சொல் பேச்சே கேட்கமாட்டாங்களா.. திரும்ப எப்டி போட்டோ எடுத்திருக்காங்க பாருங்க!

    இந்த நிலையில் அரசு விதித்த தடையையும் மீறி நேற்று ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது பாதுகாப்பு படையினர் மீது கற்களையும் பெட்ரோல் குண்டுகளையும் சிலர் வீசியதால் வன்முறை ஏற்பட்டது.

    இதன் பின்னர் போராட்டத்தைக் கலைப்பதற்காக போலீஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். இதில் பலர் காயமடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    HongKong protestors involve in violence despite the government withdraw deporting criminals to China.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X