For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கணவரல்லாத ஒருவருடன் காரில் பயணம்... போலீசிடம் சராமாரி சவுக்கடி வாங்கிய சூடான் பெண்

Google Oneindia Tamil News

HORRIFIC: Sudanese woman brutally flogged for getting into car with unrelated man
கர்த்தூம்: கணவர் அல்லாத ஒருவருடன் காரில் உடன் சென்றதற்காக பெண் ஒருவருக்கு சூடான் நாட்டுப் போலீசார் நடுரோட்டில் சரமாரியாக சவுக்கடி கொடுத்த கொடூரக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பலத்த சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது.

பொதுவாக ஆண்களை விட உடல் பலத்தில் பெண்கள் சற்று வலிமை குறைந்தவர்கள் என்ற கருத்து நிலவுவதுண்டு. அதனாலேயே பேருந்து முதற்கொண்டு சட்ட திட்டங்கள் வரை பெண்களுக்கு என சில சலுகைகள் வழங்கப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஆங்காங்கே பெண்களுக்கெதிரான வன்முறைகள் சில தலை காட்டத்தான் செய்கின்றன. அவற்றில் பெரும்பான்மையானவை பாலியல் வன்கொடுமைகள் என்றால், அதையும் தாண்டிய சில மனித உரிமை மீறல்களும் அரங்கேறுவது உண்டு. அந்த வகையில், சமீபத்தில் சூடானில் கணவரல்லாத ஒருவருடன் காரில் உடன் சென்ற குற்றத்திற்காக பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட சவுக்கடி தண்டனை பலரையும் வேதனைப் பட வைத்திருக்கிறது.

காரில் பயணம்....

சூடான் நாட்டைச் சேர்ந்தவர் ஹலிமா என்ற பெண். இவர் சமீபத்தில் கணவர் அல்லாத வேறு ஒரு ஆணுடன் காரில் பயணம் செய்த போது போலீசில் பிடிபட்டார்.

முன்மாதிரி தண்டனையாம்....

இந்தக் குற்றத்திற்காக அவருக்கு சவுக்கடி தண்டனை வழங்க போலீசார் முடிவு செய்தனர். அதன் மூலம் மற்றவர்கள் இது போன்ற செயல்களைச் செய்ய அஞ்சுவார்கள் என கருதியுள்ளனர் போலீசார்.

முக்காடிட்ட முகம்...

அப்பெண்ணின் முகம் வெளியில் தெரியாத படி முகத்திற்கு முக்காடிட்ட போலீசார், அவரை நடு ரோட்டில் பொதுமக்கள் முன்னிலையிலேயே சரமாரியாக சவுக்கால் அடிக்கத் தொடங்கினர்.

தட்டிக் கேட்கவில்லை...

வலி பொறுக்காமல் அப்பெண் கதறியதை சுற்றி இருந்தவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளனர். யாரும் தட்டிக் கேட்கவில்லை.

யூட்யூப் மூலம் அம்பலம்...

இந்நிலையில், யாரோ ஒருவர் போலீசார் அப்பெண்ணைக் கொடூரமாகத் தாக்குவதை ரகசியமாக செல்போனில் படமெடுத்து அதை யூட்யூபிலும் போட்டு விட்டார்.

சர்ச்சை....

அதன் மூலம் பலரின் பார்வைக்கு வந்த அந்தக் கொடூரத் தண்டனை தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

ஆதரவுக் குரல்கள்....

இதெல்லாம் ஒரு தவறா...? அப்பெண்ணிற்கு போலீசார் வழங்கிய தண்டனை கொடூரமானது என அப்பெண்னிற்கு ஆதரவாக குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

முறையற்ற பதில்....

ஆனால். இந்த விஷயத்தில் சூடான் அரசு சார்பில் பதிலளித்த உள்துறை அமைச்சரோ, ‘தண்டனையை நிறைவேற்றிய விதம் சரியில்லை' என்று மட்டும் கூறி நழுவியது குறிப்பிடத்தக்கது.

முக்காடிட மறுத்த பெண்....

சமீபத்தில், அமிரா ஓஸ்மன் என்ற 35 வயது இன்ஜீனியர் பெண் தலைக்கு முக்காடிட மறுத்த குற்றத்திற்காக இதே போல் சூடானில் போலீசாரால் சுமார் 40 சவுக்கடி தண்டனைக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.

English summary
In a terrifying example of Islam's Shar'ia law, a video depicts a Sudanese police officer brutally whipping a woman on a city street. Her Crime? Entering a car driven by a man that was not related to her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X