For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அபார்ஷன்... தாயின் உயிருக்கு ஆபத்தெனில் சம்மதிக்கும் 96% நாடுகள்!

Google Oneindia Tamil News

லண்டன்: கருத்தடை செய்வது தொடர்பான சட்டங்கள், விதிமுறைகள் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகிறது. ஆனால் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுமே அதாவது 96 சவீத நாடுகள், பிரசவத்தின்போது தாயின் உயிரைக் காக்க அபார்ஷன் செய்வதை அனுமதிக்கிறது என்று சமீபத்திய பியூ ஆய்வு மைய சர்வே தகவல் தெரிவிக்கிறது.

2013ம் ஆண்டு ஐ.நா. புள்ளிவிவரத்தின் அடிப்படையில், 196 நாடுகள் குறித்த அபார்ஷன் குறித்த சட்ட திட்டங்களை இந்த சர்வே கருத்தில் கொண்டது.

6 நாடுகளில் மட்டுமே எந்தச் சூழல் ஏற்பட்டாலும் அபார்ஷனை அனுமதிக்க சட்டம் அனுமதிக்கவில்லை.

தாயின் நலம்..

தாயின் நலம்..

26 சதவீத நாடுகளில் அதாவது 50 நாடுகளில் தாயின் உயிரைக் காக்க மட்டுமே அபார்ஷனுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

மனநலமும் முக்கியம்...

மனநலமும் முக்கியம்...

42 சதவீத நாடுகளில் அதாவது 82 நாடுகளில் தாயின் உயிருக்கு ஆபத்து மற்றும் வேறு ஏதாவது முக்கியக் காரணம் இருந்தால் மட்டும் அபார்ஷனுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதாவது அப்பெண்ணின் உடல் நலம் மற்றும் மன நலத்தைக் காப்பதற்காக இந்த அனுமதி அளிக்கப்படுகிறது.

குடும்பத்தினரின் கோரிக்கை...

குடும்பத்தினரின் கோரிக்கை...

58 சதவீத நாடுகளில் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று அபார்ஷனுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் கருத்தரித்து 20 வாரம் தாண்டி விட்டால் அபார்ஷன் செய்ய இந்த நாடுகள் அனுமதிப்பதில்லை.

அனுமதியில்லை...

அனுமதியில்லை...

6 நாடுகளில் மட்டும்தான் என்ன காரணமாக இருந்தாலும் சரி அபார்ஷனுக்கு அனுமதி இல்லை என்று சட்டம் உள்ளது. அதாவது டொமினிக்கன், எல் சால்வடார், நிகாரகுவா, சிலி, வாட்டிகன் சிட்டி, மால்டா ஆகியவையே இந்த நாடுகள் ஆகும்.

மூன்றில் ஒரு பங்கு...

மூன்றில் ஒரு பங்கு...

ஐரோப்பிய நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு அபார்ஷனை அனுமதிக்கிறது. பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ரஷ்யா உள்ளிட்ட 32 நாடுகள் இதில் அடக்கம். அயர்லாந்து, அன்டோரா, சான் மரீனோ ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தாயாரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே அபார்ஷன் செய்ய வழி உண்டு.

14 வருட சிறை...

14 வருட சிறை...

சட்டவிரோதமாக அபாரன்ஷன் செய்தால் அயர்லாந்தில் 14 வருட சிறைத் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. லத்தின் அமெரிக்காவில் அபார்ஷன் சட்டவிரோதமானது என்று மக்கள் நம்புகிறார்கள். உருகுவேயில் மட்டுமே அபார்ஷன் சட்டத்திற்குப்டட்தகா கருதப்படுகிறது.

சட்டப்பூர்வமாக...

சட்டப்பூர்வமாக...

சிலரியில், 47 சதவீதம் பேர் அபார்ஷனை சட்டப்பூர்வமாகக் விரும்புகிறார்கள். 49 சதவீதம் பேர் சட்டவிரோதமாக அறிவிக்க கோருகின்றனர். ஆசியா பசிபிக் நாடுகளில் அபார்ஷனை தாராளமாக அனுமதிக்கின்றன. ஆஸ்திரேியா, சீனா, துருக்கி இவற்றில் சில.

English summary
The regulation of abortion may vary widely from country to country, but nearly all nations – 96% – allow women to terminate their pregnancies in order to save their lives, according to a new Pew Research Center analysis of 196 countries based on 2013 United Nations data. Indeed, only six countries do not allow women to receive abortions under any circumstances.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X