For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொட்டதெல்லாம் தோல்வி.. இந்தியாவை சீண்டி பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்ட சீனா.. அச்சத்தில் ஜி ஜிங்பிங்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: இந்தியாவை தேவையில்லாமல் சீண்டி தற்போது சீனா பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு இருக்கிறது.

Recommended Video

    India மூலம் கலைந்து போகும் China- வின் உலகை ஆளும் கனவு

    இந்தியா சீனா இடையில் தற்போது இருக்கும் மோதல் என்பது 1962 பின் ஏற்பட்ட மிகப்பெரிய மோதல் ஆகும். ஆனால் இப்போது நடக்கும் சண்டை என்பது வெறும் சில கிலோ மீட்டர் பகுதிக்காக நடக்கும் சண்டை கிடையாது. இது வெறும் நிலத்திற்கான சண்டை இல்ல. இந்தியாவின் நிலங்களை சீனா அபகரிக்க முயல்வதற்கு இரண்டு காரணம் இருக்கிறது.

    முதல் காரணம், இந்தியாவின் நிலத்தை அபகரித்து, தனது பறந்து விரிந்த தன்மையை அதிகமாக்குவது. இன்னொன்று இந்தியாவை ஆசியாவில் வளரவிடாமல் தடுத்து அதன், வலிமையை மட்டுப்படுத்துவது. இந்த இரண்டுதான் தற்போதைய மோதலுக்கு காரணம் ஆகும்.

    பெரும் திருப்பம்.. ரஷ்யாவுடன் சண்டைக்கு போகும் சீனா.. தொடங்கியது புதிய எல்லை பிரச்சனை.. ஷாக் பின்னணிபெரும் திருப்பம்.. ரஷ்யாவுடன் சண்டைக்கு போகும் சீனா.. தொடங்கியது புதிய எல்லை பிரச்சனை.. ஷாக் பின்னணி

    வல்லரசு

    வல்லரசு

    சீனா தற்போது உலகம் மொத்தத்தையும் கட்டுப்படுத்தும் வல்லரசு நாடாக விரிய முயன்று கொண்டு இருக்கிறது. இதற்கு இரண்டு விதமான விஷயங்களை சீனா முயன்று வருகிறது. ஒன்று தனது பொருளாதாரத்தை உயர்த்தி, சந்தையை மேம்படுத்தி, உலகை பொருளாதார ரீதியாக கட்டுப்டுத்துவது. இன்னொன்று ராணுவ ரீதியாக அழுத்தம் கொடுத்து, ஆக்கிரமிப்பு செய்து படைகள் மூலம் அண்டை நாடுகளை கட்டுப்படுத்துவது.

    அமெரிக்கா வந்தது

    அமெரிக்கா வந்தது

    இத்தனை நாட்களாக அமெரிக்கா செய்து வந்ததைதான் தற்போது சீனாவும் செய்கிறது. ஆனால் அமெரிக்கா இஸ்லாமிய நாடுகளில் மட்டும் செய்ததை சீனா எந்த வேறுபாடும் பார்க்காமல் எல்லா நாடுகள் மீதும் செய்கிறது. பிரிட்டன் செய்த காலனி ஆதிக்கத்திற்கும் இதற்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை என்றுதான் கூற வேண்டும். அமெரிக்காவும், பிரிட்டனும் செய்ததை ராணுவம் மூலமும், பொருளாதாரம் மூலமும் தற்போது சீனா செய்ய நினைக்கிறது.

    இரண்டு நாடுகள்

    இரண்டு நாடுகள்

    ஆனால் பிரிட்டன்,அமெரிக்கா இரண்டும் தனது பிக்பாஸ் தந்திரத்தில் வெற்றி பெற்றது போல சீனாவால் வெற்றிபெற முடியவில்லை. சீனா தொட்டதெல்லாம் தோல்வியாக முடிந்து இருக்கிறது. ஆசியாவில் இருக்கும் நாடுகளை எல்லாம் கட்டுப்படுத்தி, பின் உலகை கட்டுப்படுத்தலாம் என்பதுதான் சீனாவின் பிளான். இதில் சீனா தொடக்கத்தில் கொஞ்சம் வெற்றியும் பெற்றது.

    நட்பு நாடுகள்

    நட்பு நாடுகள்

    ரஷ்யா, தென் கொரியா என்ற இரண்டு நட்பு நாடுகளை பெற்றது. அதோடு பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம்,நேபாளம், கனடா என்று முக்கியமான நாடுகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, தனது சொல்லுக்கு இணங்க வைத்தது. எங்கே சீனா தனது உலக சர்வாதிகாரத்தில் வென்று விடுமோ என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அதே சீனா எப்போது இந்தியாவை சீண்டியதோ அப்போதில் இருந்தே சீனா தோல்வியை தழுவி வருகிறது.

    மூன்று விதமான எதிர்ப்பு

    மூன்று விதமான எதிர்ப்பு

    இந்தியாவை சீண்டிய பின் சீனா மூன்று விதமான எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. இந்த மூன்று விதமான எதிர்ப்புகள் சீனாவின் உலகை ஆளும் கனவை உடைத்து போட்டு இருக்கிறது.

    முதல் விஷயம் - உலக அளவில் நாடுகள் எல்லாம் சீனாவிற்கு எதிராக திரும்பி உள்ளது.

    இரண்டாவது விஷயம் - உலக நாடுகள் சீனாவை விடுத்து இந்தியாவில் முதலீடுகளை செய்ய விரும்புகிறது.

    மூன்றாவது விஷயம் - உள்நாட்டுக்கு உள்ளேயே சீனாவிற்கு எதிராக அழுத்தம்.

    சீனாவிற்கு அழுத்தம்

    சீனாவிற்கு அழுத்தம்

    அதன்படி தற்போது உலக நாடுகள் எல்லாம் சீனாவிற்கு எதிராக திரும்பி உள்ளது. மெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், வியட்னாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் என்று பல நாடுகளுடன் கடல் ரீதியாகவும், ராணுவ எல்லை ரீதியாகவும் மோதி வருகிறது. ஏசியன் (ASEAN) குழுவில் இருக்கும் நாடுகள் மட்டும் சீனாவிற்கு எதிராக திரும்பி உள்ளது. ஏசியன் (ASEAN) என்பது இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், கம்போடியா, மியான்மர், புருனோய், லாவோஸ் ஆகிய நாடுகள் கொண்ட கூட்டமைப்பு ஆகும்.

    வேறு நாடுகள்

    வேறு நாடுகள்

    இன்னொரு பக்கம் அமெரிக்கா சீனாவிற்கு எதிராக இந்தியாவை ஆதரித்து படைகளை அனுப்புகிறது. ஆஸ்திரேலியா சீனா மீது பொருளாதார ரீதியாக அழுத்தம் கொடுக்கிறது. ஜப்பான் இந்தியாவிற்கு ஆதரவாக கடற்படையை அனுப்பி வருகிறது. இன்னொரு பக்கம் பிரிட்டனும் இந்தியாவிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் சீனாவிற்கு எதிராக கருத்து தெரிவிக்கிறது .

    பொருளாதாரம் எப்படி

    பொருளாதாரம் எப்படி

    சீனா இங்கேயே தனது திட்டத்தில் தோல்வியை தழுவிட்டது. இப்படி இருக்க சீனாவில் இருந்து முதலீடுகள் வேகமாக வெளியே செல்கிறது. சீனாவில் முதலீடு செய்த அமெரிக்க நாடுகள் எல்லாமே வேகமாக தற்போது இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது. சீனாவின் ராணுவ பலம் முதலில் உடைந்தது. தற்போது பொருளாதர முதலீடுகள் காரணமாக சீனாவின் பொருளாதார பலம் உடைந்து நொறுங்கி உள்ளது.

    உள்நாட்டு குழப்பம்

    உள்நாட்டு குழப்பம்

    இன்னொரு பக்கம் உள்நாட்டு குழப்பம் அந்த நாட்டில் ஏற்பட தொடங்கி உள்ளது. சீனாவிற்கு எதிராக உள்நாட்டு மக்களே கொதித்து எழ தொடங்கி உள்ளனர். இந்தியாவை சீண்டியதால், 40+ ராணுவ வீரர்களை இந்தியாவிடம் பறிகொடுத்த காரணத்தாலும் சீன மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சீன ராணுவமும் அந்நாட்டு அரசு மீது கடும் கோபத்தில் உள்ளது.

    பெரும் புரட்சி

    பெரும் புரட்சி

    அதேபோல் ஹாங்காங் மக்களின் போராட்டம், அது தொடர்பான உலக அழுத்தமும் சீனாவை நிலைகுலைய வைத்து உள்ளது. இது எல்லாம் சேர்ந்து சீனாவின் அதிபர் ஜிங்பிங்கிற்கு எதிராக பெரிதாக வெடிக்கும் என்று கூறுகிறார்கள். எப்போது வேண்டுமானாலும் இது புரட்சியாக மாற வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதனால் சீனாவும் அதன் உலகை ஆளும் கனவும் கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்க தொடங்கி உள்ளது.

    English summary
    This how China lost the plot against India in the first place itself
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X