For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சர்வதேச நீதிமன்றத்தில் தற்கொலை செய்த ப்ரால்ஜக்.. விஷம் கொண்டுவந்தது எப்படி?

போஸ்னியா முன்னாள் ராணுவத் தளபதி ஸ்லோபோதன் ப்ரால்ஜக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    சர்வதேச நீதிமன்றத்தில் தற்கொலை செய்த ப்ரால்ஜக்.. விஷம் கொண்டுவந்தது எப்படி?

    ஆம்ஸ்டர்டாம்: போஸ்னியா முன்னாள் ராணுவத் தளபதி ஸ்லோபோதன் ப்ரால்ஜக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் நீதிமன்றம் அவரை போர் குற்றவாளி என்று அறிவித்தது.

    இதனால் மனம்முடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார். இந்த நிலையில் அவர் தற்கொலை குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    மேலும் அவரின் தற்கொலை காரணமாக 6 பேர் தேவையில்லாமல் மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

    தண்டனை

    தண்டனை

    போஸ்னியா நாட்டில் 1992 - 95ம் ஆண்டுகளில் உள்நாட்டு போர் நடந்தது. அப்போது குறிப்பிட்ட இன மக்கள் லட்சம் லட்சமாக கொன்று குவிக்கப்பட்டனர். இந்த கொலைக்கு முக்கிய காரணமாக போஸ்னியா நாட்டின் ராணுவத் தளபதியான 'ஸ்லோபோதன் ப்ரால்ஜக்' உள்ளிட்ட ஆறு பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றம் விசாரித்தது, விசாரணையின் முடிவில் ராணுவத் தளபதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஆறு பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வந்தது.

    விஷம் குடித்த தளபதி

    விஷம் குடித்த தளபதி

    இந்த நிலையில் இந்த தீர்ப்பை கேட்டு ஸ்லோபோதன் மனமுடைந்து போனார். உடனடியாக தன் பாக்கெட்டில் இருந்து கண்ணாடி பாட்டிலை எடுத்தார். அதில் இருந்த கருப்பு நிற திரவத்தை குடித்தார். மேலும் நீதிபதியிடம் நான் குற்றவாளி இல்லை என்றார். விஷம் காரணமாக அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். உடனடியாக நீதிபதி நீதிமன்றத்தை ஒத்திவைத்தார். போலீசார் உதவியுடன் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்பட்டார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.

    எப்படி நடந்தது

    எப்படி நடந்தது

    இந்த நிலையில் இந்த தற்கொலையில் முக்கிய ஆதாரம் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி தற்கொலை செய்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே அதே விஷயம் அந்த முன்னாள் போர் தளபதியின் வழக்கறிஞருக்கு தெரியும் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த வழக்கறிஞர் இதுகுறித்து யாரிடமும் கூறவில்லை. மேலும் அவர் விஷத்தை கைகளிலோ, ஷுவிலோ மறைத்து கொண்டு வந்திருக்கலாம் எனப்படுகிறது. அது கண்ணாடி என்பதால் 'மெட்டல் டிடெக்டர்' காட்டிக் கொடுக்காமல் இருந்துள்ளது.

    மரணத்திலும் நடந்த சோகம்

    மரணத்திலும் நடந்த சோகம்

    அதேபோல் இவரின் தற்கொலை காரணமாக இன்னொரு சோகமான சம்பவமும் நடந்து இருக்கிறது. அவர் அவசரமாக சிகிச்சைக்கு சென்ற மருத்துவமனையில் அதே சமயத்தில் அவசர சிகிச்சைக்காக இன்னும் ஆறு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முக்கியமான குற்றவாளி என்பதால் டாக்டர்கள் இவரை கவனித்து இருக்கின்றனர். இதன் காரணமாக அந்த மருத்துவமனையில் இருந்த மற்ற 6 நோயாளிகளும் மரணம் அடைந்துள்ளனர்.

    English summary
    Former Bosnian war Criminal Died in International Court infront of Judge by drinking Poison. Now the secret behind how he brought the poison has revealed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X