For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகில் 50 லட்சம் பேரை பாதித்த கொரோனா.. ஆனாலும் சூப்பர் மாற்றம்! நம்பிக்கை தரும் ஐரோப்பா

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது. இதில் 20 லட்சம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர். 3லட்சத்து 29 பேர் உயிரிழந்துவிட்டனர்.

Recommended Video

    ஆக்ஸ்போர்ட் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி.. குரங்கு சோதனையில் வெற்றி

    கடந்த ஜனவரி 22ம் தேதி சீனாவில் வெறும் 500 பேருக்கு இருந்த கொரோனா வைரஸ் இன்று 50 லட்சத்தை தாண்டி உள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர். மீதமுள்ளோர் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வெறும் 3 சதவீதத்திற்கும் குறைவான மக்கள் தான் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    how covid 19 spreading fast in world, rises 50.80 lacks cases

    எனினும் அமெரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்க நாடுகளில் பாதிப்பு அதிகமாக இருந்தது. உயிரிழப்பும் மிக அதிகமாக இருந்தது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக குறைந்து வருகிறது. விரைவில் இயல்புநிலைக்கு திரும்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் அமெரிக்கா,ரஷ்யா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே புதிய தொற்று விகிதம் நாள்தோறும் அதிகமாக உள்ளது. உயிரிழப்பு விகிதம் அமெரிக்கா மற்றும் பிரேசிலில் அதிகமாக உள்ளது. மற்ற நாடுகளில் மிகமிக குறைவாகவே உள்ளது.

    கொரோனாவால் கடும் நெருக்கடி- இங்கிலாந்தின் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் 9,000 பணியாளர்களை நீக்க முடிவுகொரோனாவால் கடும் நெருக்கடி- இங்கிலாந்தின் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் 9,000 பணியாளர்களை நீக்க முடிவு

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 5,082,659 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 329,294 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து 2,020,151 பேர் குணம் அடைந்தனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்றுடன் 2,733,214 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 45803 பேர் தீவிர பாதிப்புடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அமெரிக்காவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 1561 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் இதுவரை 94994 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் 24 மணி நேரத்தில் 911 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்தில் 363 பேர் பலியாகி உள்ளனர். மெக்ஸிகோவில் 334 பேர் பலியாகி உள்ளனர்.

    இத்தாலி (161), ஸ்பெயின் (110), ஜெர்மனி (77), பிரான்ஸ் (110), துருக்கி (23), பெரு (110), நெதர்லாந்து (33) , பாகிஸ்தான் (46) உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் உயிரிழப்பு வேகமாக குறைந்து வருகிறது.இந்த நாடுகளில் பாதிப்பும் குறைவாகவே உள்ளது. விரைவில் கொரோனா தொற்றில் இருந்து ஐரோப்பிய நாடுகள் மீண்டும் வரும் என்ற நம்பிக்கையை உருவாக்கி வருகின்றன.

    how covid 19 spreading fast in world, rises 50.80 lacks cases

    English summary
    how covid 19 spreading fast in world, rises 50.80 lacks cases. top cases in US
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X