For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யார் இந்த டெட்ரோஸ்?.. ஆப்ரிக்க பிராந்தியத்தின் மைந்தன்... WHO தலைவராக வந்தது எப்படி..?

Google Oneindia Tamil News

ஜெனிவா: உலகம் முழுவதும் சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள இக்கட்டான இந்த பேரிடர் காலத்தில் உலக சுகாதார அமைப்பை சாதுர்யமாக வழிநடத்திச் செல்கிறார் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேஸஸ்.

உலக வரலாற்றில் முதல்முறையாக உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவராக ஆப்ரிக்க பிராந்தியத்தில் இருந்து கடந்த 2017-ம் ஆண்டு டெட்ரோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எரிடீரியாவின் அஸ்மாராவில் பிறந்த டெட்ரோஸ் இன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு, கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றிபெற்று மனித குலத்தை காப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

தங்கச்சுரங்கம்

தங்கச்சுரங்கம்

தங்கச்சுரங்கங்களுக்கு பெயர் பெற்ற எரிடீரியா வடகிழக்கு ஆப்ரிக்க பிராந்தியத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் எத்தியோப்பியாவின் ஒரு மாகாணமாக திகழ்ந்த எரிடீரியா 1993-ம் ஆண்டு தனி நாடாக உருவெடுத்தது. இங்குள்ள அஸ்மாரா என்ற ஊரில் பிறந்த டெட்ரொஸ் அதனோம் கெப்ரியேஸஸ் ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர். இவருடைய தம்பி 3 வயதாக இருக்கும் போதே திடீரென மரணமடைந்ததால் அதற்கான காரணம் தெரியாமல் டெட்ரொஸ் தவித்து வந்திருக்கிறார். பின்னர் தான் அவருக்கு புரிந்தது, தனது தம்பி அம்மை நோயால் உயிரிழந்திருக்கிறார் என்று. இதையடுத்து அவருடைய சிந்தனைகளும், ஆய்வுகளும், மருத்துவத்துறையை சார்ந்ததாகவும் தொற்றுநோய் ஒழிப்பை பற்றியதாகவும் இருந்து வந்தது.

தொற்றுநோய்

தொற்றுநோய்

இளங்கலை கல்லூரி படிப்பை உள்ளூரில் படித்த டெட்ரோஸ், முதுகலை படிப்புக்காக லண்டன் செல்கிறார். அங்குள்ள லண்டன் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோய் நோய் எதிர்ப்பு துறையில் முதுகலை பட்டம் பெற்ற அவர், பின்னர் உலகப்புகழ்பெற்ற நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் சமூக ஆரோக்கியம் என்ற தலைப்பில் ஆய்வை முடித்து முனைவர் பட்டம் பெற்றார். இதையடுத்து அவர் வெளியிட்ட சில கட்டுரைகளும், ஆய்வு முடிவுகளும் டெட்ரோஸை உலக அளவில் சிறந்த சுகாதாரத்துறை அறிஞராக வெளிச்சம் போட்டுக் காட்டியது.

அமைச்சர்

அமைச்சர்

உலகப்புகழ்பெற்ற சுகாதார அறிஞராக விளங்கிய டெட்ரொஸ் கால ஓட்டத்தில் அரசியலுக்குள் நுழைந்து எத்தியோப்பிய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். 2005-2012 காலகட்டத்தில் எத்தியோப்பியாவில் டெட்ரொஸ் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது ஆப்ரிக்க பிராந்தியத்தையே திரும்பி பார்க்க வைக்கும் வகையில் எண்ணற்ற சீர்திருத்தங்களை செய்து காட்டினார்.

WHO தலைவர்

WHO தலைவர்

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவராக கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் டெட்ரோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்பு உலகம் முழுவதும் சுகாதார பணிகளை ஒருங்கிணைத்து வழிநடத்துவது, தொற்று நோய்களுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, போன்ற பணிகளை செய்து வருகிறது. இதனிடையே இந்த அமைப்புக்கு ஆப்ரிக்க நாட்டவர்கள் தலைவராக வருவது எட்டாகனியாக இருந்த நிலையில் தடைகளை தகர்த்தெறிந்து வரலாற்றில் முதல்முறை என்ற பெருமையோடு WHO தலைவர் பதவியை அலங்கரித்து வருகிறார் டெட்ரோஸ்.

அபார வெற்றி

அபார வெற்றி

உலக சுகாதார அமைப்பு தலைவர் பதவிக்கு டெட்ரோஸ் போட்டியிட்ட போது அவருக்கு 186 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். இவரை எதிர்த்து போட்டியிட்ட பிரிட்டனை சேர்ந்த டேவிர் நேபரா, பாகிஸ்தானை சேர்ந்த நிஸ்தார் ஆகிய இருவருக்கும் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால் அவர்கள் தோல்வியை தழுவினர். இப்படி உலக சுகாதார அமைப்பின் உச்சபீடத்தை அடைந்த டெட்ரோஸ், உலக வரலாற்றில் தவிர்க்க முடியாத காலகட்டமான இந்த கொரோனா பேரிடர் காலத்தில் உலக நாடுகளை ஒருங்கிணைத்து தொற்றுநோய்க்கு எதிரான போரை முன்னின்று நடத்தி வருகிறார்.

English summary
How did tedros become WHO leader?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X