For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு வாரம்.. ஆரவாரம்.. ஓஹோன்னு கொண்டாடி முடிந்த காதலர் தினம்

Google Oneindia Tamil News

சிகாகோ: நாமெல்லாம் காதலர் தினம் ஜாலியா கொண்டாடி முடித்து விட்டோம். நமக்கு தெரிந்த வரை காதலர் தினம் என்பது பெப்ரவரி 14 தான். அன்று தான் பூக்களை பரிமாறி காதல் வாழ்த்து சொல்லி காதலை பரிமாறிக் கொள்கிறோம்.

காதலர் தினம் என்பது மேலை நாட்டு கலாச்சாரம் தான் . அங்கிருந்து இங்கு வந்த கொண்டாட்டங்களில் ஓன்று தான் அது. ஆனால் நம்மை மாதிரி அங்கே கொண்டாட்டம் ஒரு நாள் இல்ல.

அப்புறம் எப்படி? ஒரு வாரம் காதல் வாரம் தான். பிப்ரவரி 7 தொடங்கி பெப்ரவரி 14 வரை காதல் வாரம் தான் . ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினுசா கொண்டாடறாங்க. வாங்க பார்க்கலாம்.

ரோஜா தினம்

ரோஜா தினம்

காதலை சொல்லுவது என்றதுமே நினைவுக்கு வருவது ஒற்றை ரோஜா தான். அந்த ரோஜாக்களுக்கான நாள் தான் ரோஸ் டே. பெப்ரவரி 7 ரோஜா தினமாக வைத்து தான் காதல் கொண்டாட்டங்கள் அழகாக ஆரம்பிக்கிறது .

ப்ரொபோஸ் டே

கமல் மாதிரி விழுந்து விழுந்து காதலித்து விட்டு முரளி மாதிரி காதலை சொல்லாமல் இருந்தால் எப்படி.. ஸோ, அதற்கு தான் இந்த நாள். பிப்ரவரி 8 அன்றை காதலை சொல்லும் தினமாக கொண்டாடுகிறார்கள்.

சாக்லேட் டே

சாக்லேட் டே

இனிப்பு இல்லாமல் வாழ்க்கை உண்டா. இனிப்பு இல்லாத கல்யாண வீடு உண்டா . இனிப்பு செய்யாத பண்டிகை உண்டா . அப்புறம் சாக்லேட் இல்லாம காதலர் தினம் மட்டும் எப்படி. பிடித்தவர்களுக்கு பிடித்த சாக்லேட் வாங்கி கொண்டு போய் அப்படியே அன்பில் குளிர்விக்க இந்த நாள்.

டெட்டி டே

டெட்டி டே

காதலர்களுக்கு கைக்கு வந்த கலையாக எப்போதும் பரிமாறிக்கொள்ளும் ஒரு பரிசு என்றால் அது டெட்டி தான். அதுவும் பெண்களுக்கு டெட்டி என்றால் உயிர். உயிருக்கு உயிரானவர்களுக்கு டெட்டி வாங்கி கொடுக்க பிப்ரவரி 10 டெட்டி டே . என்னது ஒவ்வொன்றுக்கும் ஒரு நாளா என்று நீங்க கேட்பது புரிகிறது . ஆனால் இன்னும் இருக்கிறது அதையும் பாருங்க.

ப்ரோமிஸ் டே

அன்பில் அன்பை பரிமாறிக்கொள்வதை விட உறவு என்று வரும்போது நம்பிக்கை தான் முக்கியமாக இருக்கிறது. அப்படி உனக்காக நான் இருப்பேன் எப்போதும் உன்னை நேசிப்பேன் என்று சாத்தியங்கள் பரிமாறிக்கொள்ள ஒரு நாள் . அது தான் ப்ரோமிஸ் டே பிப்ரவரி 11.

ஹக் டே

அன்பை பரிமாறி கட்டிக்கொள்ள ஒருநாள் . அது தான் பிப்ரவரி 12 ஹக் டே. கட்டிக்கொள்ளவும் ஒரு நாளா என்று நீங்க கேட்டாலும் கூட வசூல் ராஜா படத்தில் வருவது போல கட்டிப்பிடி வைத்தியத்தில் அத்தனை விஷயம் இருக்கு.

கிஸ் டே

வார்த்தைகள் இல்லா தருணத்தில் அன்பை சொல்ல எல்லோரும் பயன்படுத்தும் மொழி முத்தம்.. அன்பில் முத்தங்களை பரிமாறி கொள்ள ஒரு நாள் அது தான் பிப்ரவரி 13 கிஸ் டே .

வாலெண்டின்ஸ் டே

அப்பாடா இத்தனையும் கொண்டாடி முடிச்சா தான் அடுத்த நாள் அங்க வாலெண்டின்ஸ் டே . காதலர் தினம். சும்மா சொல்லக் கூடாது . சும்மா திருவிழா மாதிரி ஜோரா கொண்டாடறாங்க.

என்ன, உங்களை மாதிரிதான் அவங்களும் கொண்டாடுறாங்களா.. இல்லை அவங்களை விட நீங்க பெஸ்ட்டா கொண்டாடுனீங்களா... கமெண்ட்ல வந்து சொல்லிட்டு போகலாமே.

- Inkpena சஹாயா

English summary
This is a write up, how effectively Valentines day is being celebrated in USA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X