For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை வால்நட்சத்திரத்தை நெருங்கும் ரோசெட்டா விண்கலம்- நவம்பரில் தரை இறங்கும்!

Google Oneindia Tamil News

பிரஸ்ஸல்ஸ்: ஐரோப்பிய யூனியனின் ரோசெட்டா விண்கலமானது, 67பி/சுரிமோவ்-கெரசிமென்கா வால் நட்சத்திரத்தை நாளை நெருங்கப் போகிறது. நவம்பர் மாதம் வால் நட்சத்திரத்தில் அது தரையிறங்கவுள்ளது.

பத்து வருடங்களுக்கு முன்பு ரோசெட்டா விண்கலம் தனது பயணத்தைத் தொடங்கியது.

வால் நட்சத்திரம் ஒன்றில் இதற்கு முன்பு எந்த விண்கலமும் இறங்கியதில்லை.

சுற்றி வரும் ரோசெட்டா:

சுற்றி வரும் ரோசெட்டா:

அதேசமயம், ரோசெட்டா விண்கலமானது இந்த வால்நட்சத்திரத்தை சுற்றி வந்து தரையிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட பயணம்:

நீண்ட பயணம்:

மேலும், சூரிய மண்டலத்துக்கு அப்பால் மிகப் பெரிய நீண்ட பயணத்தையும் ரோசெட்டா நிகழ்த்தியுள்ளது.

பில்லியன் கிலோ மீட்டர்:

பில்லியன் கிலோ மீட்டர்:

ஆகஸ்ட் 6 ஆம் தேதி புதன்கிழமையன்று ரோசெட்டா விண்கலம், 67பி வால் நட்சத்திரத்தை மேலும் நெருங்கும். இந்த விண்கலமானது இதுவரை 6.4 பில்லியன் கிலோமீ்ட்டர் தூரத்தை கடந்து வந்துள்ளது என்பது முக்கியமானது.

2004 இல் துவங்கிய பயணம்:

2004 இல் துவங்கிய பயணம்:

கடந்த 2004 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ரோசெட்டா தனது பயணத்தைத் தொடங்கியது. பூமி மற்றும் செவ்வாய் கிரகத்தைத் தாண்டி இது பயணப்பட்டுள்ளது. மேலும் ஜூபிடர் கிரகத்தையும் இது தாண்டி தற்போது இந்த வால் நட்சத்திரத்தை நெருங்கியுள்ளது.

இலக்கை நோக்கி:

இலக்கை நோக்கி:

கடந்த மே மாதம் முதல் இதன் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது தனது இலக்கை இந்த விண்கலம் நெருங்கியுள்ளது.

மிதமாகும் வேகம்:

மிதமாகும் வேகம்:

தற்போது இந்த விண்கலமானது மணிக்கு 34,175 மைல்கள் என்ற வேகத்தில் போய்க் கொண்டுள்ளது. ஆனால் வால்நட்சத்திரத்தை அது அடைய வேண்டுமானால், மணிக்கு 2.2 மைல்கள் என்ற வேகத்தில் போக வேண்டும். காரணம் அந்த வேகத்தில்தான் அந்த வால்நட்சத்திரம் நகர்ந்து கொண்டுள்ளது.

தரையைத் தொடும்:

தரையைத் தொடும்:

ஜூலை மாதத்திலிருந்து ரோசெட்டாவின் வேகத்தை வாரந்தோறும் குறைத்து வருகின்றனர். கடைசியாக ஆகஸ்ட் 6 ஆம் தேதி இதன் வேகம் குறைக்கப்படவுள்ளது. அப்போதுதான் ரோசெட்டா, வால்நட்சத்திரத்தின் தரைப்பரப்பிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவை அடைய முடியும்.

பிலே லேண்டர்:

பிலே லேண்டர்:

ரோசெட்டாவுடன், பிலே என்று அழைக்கப்படும் சிறிய லேண்டரும் இணைக்கப்பட்டுள்ளது. இதுதான் வால் நட்சத்திரத்தில் தனது காலை முதலில் பதிக்கும். நவம்பர் மாதம் இந்த லேண்டிங் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் பரிசோதனைக்காக சில மாதிரிகளை அது வால் நட்சத்திரத்தில் எடுக்கவுள்ளது. அங்கேயே சில பரிசோதனைகளையும் இந்த விண்கலம் செய்யவும் உள்ளது.

சூரியனையும் சுற்றும்:

சூரியனையும் சுற்றும்:

சூரியனை இந்த வால் நட்சத்திரம் சுற்றி வரும்போது அங்கு லேண்ட் ஆகியுள்ள ரோசெட்டா விண்கலமும் வால் நட்சத்திரத்திலேயே இடம் பெற்றிருக்கும்.

அற்புதமான படங்கள்:

அற்புதமான படங்கள்:

தற்போது வால் நட்சத்திரத்தின் சில அற்புதமான படங்களை ரோசெட்டா எடுத்து அனுப்பி வைத்துள்ளது. கடைசியாக கிடைத்த லேட்டஸ்ட் படமானது, வால் நட்சத்திரத்திலிருந்து 5500 கிலோமீட்டர் தொலைவில் விண்கலம் இருந்தபோது எடுத்ததாகும்.

English summary
After a decade-long trek across the solar system, a European spacecraft named Rosetta is about to do something none of its predecessors have done before: orbit a comet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X