For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"எஸ்.இ.டி.சி"யில் போனா 10 லட்சம் வருஷமாகும்.. "கேப்" புக் பண்ணிப் போனா 39 வருஷமாகும்..!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: புத்தம் புது பூமி வேண்டும்.. நித்தம் ஒரு வானம் வேண்டும்.. இதுதான் மனிதர்களின் தினசரி பிரார்த்தனையாக உள்ளது. அந்த அளவுக்கு புதிய பூமியைத் தொடர்ந்து தேடி வருகிறது மனித குலம்.

அவ்வப்போது பூமியை ஒத்த சில கிரகங்களை நாசா கண்டுபிடித்துக் கொண்டேதான் உள்ளது. ஆனாலும் இதுவரை மாற்று பூமியைக் கண்டுபிடித்தபாடில்லை. இந்த நிலையில்தான் 7 புதிய கிரகங்களைக் கொண்ட புதிய சூரியக் குடும்பத்தை (டிராப்பிஸ்ட் 1) கண்டுபிடித்துள்ளது நாசா. இந்த 7 கிரகங்களில் 3ல் மனிதர்கள் வசிக்கக் கூடிய சூழல் நிலவுவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

டிராபிஸ்ட் 1 என்ற நட்சத்திரத்தை இந்த கிரகங்கள் சுற்றி வருகின்றன. இவை அனைத்தும் பூமியிலிருந்து கிட்டத்தட்ட 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன. இவற்றை சென்றடைய ஆகும் நேரம் குறித்த சுவாரஸ்யத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாதா விண்கலம் மூலம் போனால்

சாதா விண்கலம் மூலம் போனால்

நாசாவின் சாதாரண விண்கலம் மூலம் போவதாக இருந்தால், அதிலும் மணிக்கு 28,163 கிலோமீட்டர் வேகத்தில் போவதாக இருந்தால் கிட்டத்தட்ட 10.5 லட்சம் வருடங்களாகும், "ஊர்" போய்ச் சேர!

நியூஹாரிஸான்ஸ் மூலம் போனால்

நியூஹாரிஸான்ஸ் மூலம் போனால்

நாசாவின் அதி நவீன நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம் மூலமாக போவதாக இருந்தால், மணிக்கு 51,516 கிலோமீட்டல் வேகத்தில் செல்வதாக இருந்தால் 8 லட்சம் வருடங்களாகும்.

நானோகிராப்ட் மூலம்

நானோகிராப்ட் மூலம்

நாசாவின் நானோ கிராப்ட் மூலமாக, ஒளியின் வேகத்தில் 20 சதவீத வேகத்தில் செல்வதாக இருந்தால் 200 வருடங்களில் இந்த சூரியக் குடும்பத்தை சென்றடைய முடியும்.

வேகமாக போக வேண்டும் என்றால்

வேகமாக போக வேண்டும் என்றால்

விரைவாக செல்ல ஒரே வழி ஒளியின் வேகத்தில் செல்வது மட்டுமே. அப்படிப் போவதாக இருந்தால் 39 அல்லது 40 வருடத்தில் போய்ச் சேர முடியுமாம். இப்போதைக்கு இதை விட விரைவாக செல்ல வழி இல்லையாம்.

English summary
It will take minimum 39 years to maximum 10.5 million years to reach TRAPPIST 1 solar family, which has 7 new earth size planets and among the 3 have earth's environment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X