For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாஸ் காட்டிய நியூசிலாந்து.. கொரோனாவை ஓட ஓட விரட்டியது இப்படித்தான்!

Google Oneindia Tamil News

வெலிங்டன்: கொரோனா வைரசை, தங்கள் நாட்டிலிருந்து ஏறத்தாழ முற்றிலுமாக அகற்றிவிட்டதாக அறிவித்துள்ளது நியூசிலாந்து. பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் எடுத்த சில அதிரடி நடவடிக்கைகள் நியூசிலாந்தை பாதுகாப்பான நாடாக மாற்றியுள்ளது.

Recommended Video

    ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி...குரங்குகள் உடலில் வேலை செய்கிறது

    நியூசிலாந்தில் நேற்று புதிதாக, கொரோனா நோயாளிகள் வெறும் 4 என்ற அளவுக்குத்தான் பதிவாகியிருந்தனர். அப்படி என்ன நடவடிக்கைகளை நியூசிலாந்து அரசு எடுத்தது என்பது பற்றிய ஒரு தொகுப்பை பாருங்கள்:

    பிப்ரவரி 28 அன்று நியூசிலாந்து தனது முதல் கொரோனா வைரஸ் பிரச்சினையை உறுதிப்படுத்தியது. அதாவது அமெரிக்கா தனது முதல் கொரோனா பாதிப்பை உறுதிசெய்த ஒரு மாதத்திற்குப் பிறகு.

    2 போலீசாருக்கு கொரோனா.. சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேன் மூடல்! 2 போலீசாருக்கு கொரோனா.. சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேன் மூடல்!

    தடை விதிப்பு

    தடை விதிப்பு

    மார்ச் 14 அன்று, நாட்டில் 6 கேஸ்கள் இருந்தபோது, ​​நாட்டிற்குள் நுழையும் அனைவரும் இரண்டு வாரங்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் அறிவித்தார். மார்ச் 20 ம் தேதி வெளிநாட்டினர் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இது உலகின் மிகக் கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    3வது நிலை லாக்டவுன்

    3வது நிலை லாக்டவுன்

    மார்ச் 23 அன்று - 102 உறுதிப்படுத்தப்பட்ட கேஸ்கள் இருந்தன. அதேநேரம் இறப்புகள் ஏதும் இல்லை. ஆனால் அப்போதே நியூசிலாந்து "நிலை 3" லாக்டவுனுக்குள் செல்வதாக ஆர்டெர்ன் அறிவித்தார். அத்தியாவசியமற்ற தொழில்கள் மூடப்பட்டன, நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிகள் மூடப்பட்டன.

    4வது ஸ்டேஜ் லாக்டவுன்

    4வது ஸ்டேஜ் லாக்டவுன்

    முடிந்த அளவுக்கு, வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு நிறுவன உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அத்தியாவசிய தொழிலாளர்களுக்கு மட்டும் பொது போக்குவரத்து இயக்கப்பட்டது. உள்நாட்டு விமான பயணம் தடைசெய்யப்பட்டது. மார்ச் 25 நள்ளிரவில், நியூசிலாந்து 4வது ஸ்டேஜ் லாக்டவுனை அறிமுகம் செய்தது. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டது.

    அதிக பரிசோதனைகள்

    அதிக பரிசோதனைகள்

    நியூசிலாந்து பரவலான பரிசோதனையை மேற்கொண்டது. 123,920 பேருக்கு இன்றுவரை அங்கு பரிசோதனை செய்யப்பட்டது. நியூசிலாந்து சோதனை விகிதம், உலகில் மிக அதிகமான தனிநபர் சோதனை விகிதங்களில் ஒன்றாகும், ஒரு நாளைக்கு 8,000 சோதனைகள் வரை செய்யப்படும் திறன் நியூசிலாந்தில் உள்ளது.

    ஒற்றை இலக்கம்

    ஒற்றை இலக்கம்

    ஏப்ரல் 9 ஆம் தேதி, கொரோனா கேஸ்கள் சரிந்தபோதும், பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் எல்லைக் கட்டுப்பாடுகளை இன்னும் கடுமையாக்கினார். இப்போது நியூசிலாந்தில் நோயாளிகள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திற்கு இறங்கத் தொடங்கியுள்ளது. எனவே 3வது ஸ்டேஜ் லாக்டவுனுக்கு தளர்வை கொண்டு வந்துள்ளார் ஜசிந்தார்.

    English summary
    In New Zealand yesterday, only 4 cases of corona virus were reported. Check out how New Zealand government has taken action?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X