For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்களைவிட அதிக வயதாம் உங்க இதயத்துக்கு- உடனே கவனிக்கத் தொடங்குங்க!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவின் நோய் தடுப்பு அமைப்பு நடத்திய சமீபத்திய ஆய்வின்படி நான்கில் மூன்றுபேருக்கு உண்மை வயதைக் காட்டிலும் அவர்களது இதயத்துக்கு கிட்டதட்ட ஐந்து வயது அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரிட்டனின் இதய அறக்கட்டளையுடன் இணைந்து பர்மிங்காம் இதய ஆய்வு நிறுவனம் அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.

இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதயத்தின் வயதை அதிகரிப்பது புகைப்பிடித்தல், ரத்த அழுத்த அளவீடு மற்றும் உடல் எடை போன்றவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதயத்திற்கு வயது ஜாஸ்தியாம்:

இதயத்திற்கு வயது ஜாஸ்தியாம்:

அமெரிக்காவின் தென்பகுதியில் இருக்கும் மிசிசிப்பி, மேற்கு விர்ஜீனியா, லூசியானா, கென்டக்கி மற்றும் அலபாமா ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவர்களது வயதைக் காட்டிலும் இதயத்தியற்கு அதிக வயதாகியிருப்பது தெரியவந்துள்ளது.

இளமையாய் இருக்கும் இதயம்:

இளமையாய் இருக்கும் இதயம்:

இதற்கு நேர்மறையாக உட்டா, கோலராடோ, கலிபோர்னியா, மாஸாச்சூசெட்ஸ் மற்றும் ஹவாய் பகுதிகளில் இதயத்தின் வயது அவர்களின் வயதைவிட குறைவாகவே உள்ளது.

ஆப்பிரிக்காவில் அதிக வயது:

ஆப்பிரிக்காவில் அதிக வயது:

அதிலும் குறிப்பாக கருப்பின ஆண் மற்றும் பெண்களுக்கு இதயத்தின் வயது மிகமிக அதிகமாக உள்ளது. கருப்பின பெண்களுக்கு சராசரியாக ஐந்து முதல் ஏழு வயது அதிகமானதாக, மற்ற இன பெண்களைக் காட்டிலும் உள்ளது. அதேபோல, கருப்பின ஆண்களுக்கு சராசரியாக மூன்று முதல் நான்கு வயது அதிகமாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சத்துமிக்க உணவும், உடற்பயிற்சியும்:

சத்துமிக்க உணவும், உடற்பயிற்சியும்:

பிரிட்டனில் ஒவ்வொரு ஏழு வினாடிக்கும் ஒருவர் இதய குழாய்களில் ஏற்படும் பிரச்சனைகளால் உயிரிழக்கின்றனர். இதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள நாமும் முயற்சிக்க முடியும். அளவான சத்துமிக்க உணவு, சிறிது நேர உடற்பயிற்சி மற்றும் உடலின் எடை மீது குறைந்தபட்ச அக்கறை ஆகியவை அவசியமானது. இதை கவனித்துக் கொண்டால், இதய நோய் மட்டுமின்றி எந்த நோயும் நம்மை நெருங்காது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Nearly three out of four U.S. adults have a heart that is older than the rest of their body, says report by Centers for Disease Control and Prevention.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X