For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னால் முடியவில்லை.. விமானம் விழுவதற்கு முன் பைலட் அனுப்பிய மெசேஜ்.. பாக். விபத்தின் பகீர் பின்னணி

பாகிஸ்தான் விமான விபத்து எப்படி நடந்தது, விமானம் எப்படி கீழே விழுந்தது என்பது தொடர்பான பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது.

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் விமான விபத்து எப்படி நடந்தது, விமானம் எப்படி கீழே விழுந்தது என்பது தொடர்பான பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது.

Recommended Video

    Pakistan flight incident| பாகிஸ்தான் விமானி அனுப்பிய தகவல்.. விமான விபத்தின் பின்னணி

    பாகிஸ்தானில் விமான விபத்து ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு விமான போக்குவரத்து தொடங்கி ஒரு வாரத்திற்குள் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த பிகே -8303 என்ற விமானம் விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

    ஏர்பஸ் ஏ 320 என்ற விமானம் ஆகும் இது. இந்த விமானம் லாகூரில் இருந்து இன்று மதியம் 1 மணிக்கு புறப்பட்டு உள்ளது. 3 மணிக்கு அந்த விமானம் கராச்சியில் தரையிறங்க வேண்டும். சரியாக தரையிறங்கும் முன் அந்த விமானம் விழுந்துள்ளது.

    சுய சார்பு பொருளாதாராம்.. அன்றே சொன்னாரே சீமான்.. யாருமே கேட்கலை.. வாசகரின் ஆதங்கம்!சுய சார்பு பொருளாதாராம்.. அன்றே சொன்னாரே சீமான்.. யாருமே கேட்கலை.. வாசகரின் ஆதங்கம்!

    எத்தனை

    எத்தனை

    இந்த விமானத்தில் மொத்தம் 91 பயணிகள் இருந்துள்ளனர். விமான பணியாளர்கள் 8 பேர் இருந்துள்ளனர். இந்த விமானம் அங்கு இருக்கும் ஜின்னா கார்டன் என்ற பகுதியில் விழுந்து நெருங்கி உள்ளது. ஜின்னா ஏர்போர்ட் அருகே இருக்கும் பகுதியாகும் இது. அங்கு மக்கள் அதிகம் இருக்கும் இருக்கும் மாடல் காலனி பகுதியில் இந்த விமானம் விழுந்துள்ளது. இதில் எத்தனை பேர் பலியானார்கள் என்று விவரம் வெளியாகவில்லை.

    மோசமான சேதம்

    மோசமான சேதம்

    அங்கு இருக்கும் வீடுகள் இதனால் மோசமாக சேதம் அடைந்துள்ளது. தற்போது அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. விமானப்படையும் அங்கு மீட்பு பணிகளை செய்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அரசு இது தொடர்பாக முதற்கட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், அந்த பிகே -8303 விமானம் தரையிறக்கும் முன் விழுந்து நெருங்கி உள்ளது. விமானம் வந்த நேரத்தில் இரண்டு ரன் வேயில் வேறு விமானங்கள் இல்லை.

    பின்னணி

    பின்னணி

    இதனால் அங்கு இந்த விமானம் தரையிறங்கி இருக்கலாம். ஆனால் இந்த பிகே -8303 விமானம் தரையிறங்கவில்லை. மாறாக அந்த விமானம் இறங்கும் முன் இரண்டு முறை சுற்றி உள்ளது. முதல் முறை விமானம் இறங்கவில்லை. அப்போது விமானி கட்டுப்பாட்டு தளத்திற்கு அவசர மெசேஜ் அனுப்பி இருக்கிறார். அதில் என்னால் விமானத்தை தரையிறக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

    அவசர மெசேஜ்

    அவசர மெசேஜ்

    விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு தளத்திற்கு அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப கோளாறு இருக்கிறது. அதனால் விமானத்தை இறக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். அதன்பின் மீண்டும் இரண்டாவது முறை முயன்று, பின் மூன்றாவது முறை விமானத்தை இறக்க முயன்றுள்ளார். அவர் 520 அடி உயரத்தில் விமானத்தை பறக்கும் போது எதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

     எப்படி விழுந்தது

    எப்படி விழுந்தது

    அப்போது விமானத்தின் சிக்னல் போய் உள்ளது. அதன்பின் விமானியுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.சரியாக அப்போதுதான் விமானம் விழுந்து நொறுங்கி உள்ளது. ஓடுதளத்திற்கு சில மீட்டர்களுக்கு முன் விமானம் விழுந்துள்ளது. விமானம் கொஞ்சம் ஒத்துழைத்து இருந்தால் விமானி அதை சரியாக தரையிறக்கி இருப்பார் என்கிறார்கள். இது தொடர்பாக மேலும் விசாரிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

    English summary
    How Pakisthan flight crash happened: Unknown details about the horror.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X