For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Video: மீண்டு வந்த தேவன்.. ஈஸ்டர் பண்டிகையின் மகத்துவம்.. அமெரிக்க கொண்டாட்டம் எப்படி!

Google Oneindia Tamil News

சிகாகோ: உலகம் முழுவதும் எத்தனையோ மதங்கள்.. ஆனால் எல்லா நதிகளும் கடலில் போய்க் கலப்பது போல அத்தனை மதங்களும் போதிப்பது அன்பு, அகிம்சை, அமைதியைத்தான். அந்த வகையில் ஈஸ்டர் ஒரு அருமையான கிறிஸ்தவ மத பண்டிகை.

ஈஸ்டர் பெருநாள் ஏசு பிரான் மனித குலத்துக்காக சிலுவையில் தன்னை ஒப்புக் கொடுத்து உயிர் நீத்து பின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் உயிர்ப்பின் தினமாக உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. நாம் எல்லோரும் ஈஸ்டர் திருநாளை அருமையாய் கொண்டாடி முடித்திருக்கிறோம். இந்த நேரத்திலே அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த நாளை எப்படி கொண்டாடுறாங்க என்று இந்தப் பதிவில் பார்க்கலாம் .

How Palm Sunday, Good Friday and Easter celebrated in USA

3 வகையான நிகழ்வுகளை உள்ளடக்கியது இந்த ஈஸ்டர் பண்டிகை. பாம் சண்டே எனப்படும் குருத்தோலை ஞாயிறு அதில் ஒன்று. இந்த நாளில் எல்லோருக்கும் குருத்தோலை வழங்கப்படும். கோவிலை சுற்றி அந்த ஓலையோடு பவனி வருவார்கள்.

How Palm Sunday, Good Friday and Easter celebrated in USA

அடுத்து வருவது புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி. அந்த வெள்ளி அதாவது புனித வெள்ளி அன்று உணவு உட்கொள்ளாமல் விரதம் இருந்து ஏசு மரித்த மூன்று மணிக்கு பின் நம்ம ஊர் கோவில்களில் கஞ்சி காய்ச்சி எல்லோருக்கும் பரிமாறுவார்கள்.

பின்னர் ஈஸ்டர் அன்று நடு இரவு 12 மணி திருப்பலியில் உயிர்ப்பு தினத்தை கொண்டாடுவார்கள். இது நம்ம ஊர் வழக்கம். சரி, அமெரிக்காவில் எப்படி இருக்கும் இந்த கொண்டாட்டங்கள், அங்கு எப்படிக் கொண்டாடுகிறார்கள், என்ன சாப்பிடுவாங்க.. கஞ்சியெல்லாம் இருக்குமா.. இதெல்லாம் நமது மனதில் தோன்றுவது இயல்புதானே.. சரி வாங்க அதை வீடியோவாக பார்க்கலாம்.

- Inkpena

English summary
This is an experience based sharing on how palm sunday, good friday and easter are celebrated in countries like USA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X