For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

”பாஸ்” மேல கோவத்தில் திட்டி மெயில் அனுப்பிட்டீங்களா? இனி ஈஸியா "அழிச்சுரலாம்" பாஸ்!!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: யாரையேனும் திட்டியோ, தவறாகவோ மெயிலை உணர்ச்சிவசப்பட்டு அனுப்பி விட்டீர்களா? இனி அதை நினைத்து கவலைப்பட வேண்டாம். அனுப்பிய மெயிலை குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்பப் பெறும் வசதியை ஜிமெயில் அறிமுகம் செய்துள்ளது.

இ மெயிலை பயன்படுத்துவது எளிதாக இருக்கிறது. இ மெயிலில் பல வசதிகள் இருந்தாலும் சில நேரங்களில் மெயிலை அனுப்பிய பின் அதை ரத்து செய்ய வேண்டும் என நினைக்கும் நிலை வரலாம்.

உணர்ச்சிவசப்பட்டு ஒரு மெயிலை அனுப்பி விட்டு பின்னர் அவ்வாறு செய்திருக்க வேண்டாம் என நினைப்பது அல்லது தகவல் பிழை மற்றும் விடுபட்ட தகவல் என பல காரணங்களுக்காகவும் மெயிலைத் திரும்பப் பெற பலரும் விரும்புவோம்.

கைகொடுக்கும் “அன்சென்ட்” வசதி:

கைகொடுக்கும் “அன்சென்ட்” வசதி:

இது போன்ற நேரங்களில் கைகொடுப்பதற்காக என்று ஜிமெயிலில் இப்போது மெயிலினை அன் சென்ட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இது அனுப்பிய மெயிலை திரும்ப பெறும் வசதியாகும்.

சோதனை முறையில் மெயில் ரிட்டர்ன்:

சோதனை முறையில் மெயில் ரிட்டர்ன்:

கூகுள் ஏற்கனவே ஜிமெயில் லேப்ஸ் மூலம் சோதனை முறையில் இந்த வசதியை அளித்து வருகிறது. அதன் புதிய மெயில் சேவை செயலியான இன்பாக்சிலும் இந்த வசதி இருக்கிறது.

எட்டிப்பார்க்கும் அன் சென்ட் பெட்டி:

எட்டிப்பார்க்கும் அன் சென்ட் பெட்டி:

இப்போது ஜிமெயில் உபயோகிப்பாளர்களுக்கு இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜிமெயிலை பயன்படுத்தும்போது மெயிலை அனுப்பிய பிறகு அன் சென்ட் வசதி கொண்ட ஒரு பெட்டி எட்டிப்பார்க்கும்.

திரும்பி வரும் மெயில்:

திரும்பி வரும் மெயில்:

மெயிலில் ஏதேனும் தவறு இருப்பதாக நினைத்தால் அல்லது அதை அனுப்ப வேண்டாம் என நினைத்தால் உடனே அந்த பட்டனை கிளிக் செய்தால் மெயில் டொய்ங் என்று உங்களுக்கே பூமராங் மாதிரி அனுப்பப்படாமல் திரும்பி வந்துவிடும். என்ன இனி யாரயாவது திட்ட வேண்டும் என்றால் இப்படி பழிதீர்த்துக் கொள்ளலாம்!!

English summary
Google’s finally releasing its fix to (one of) your most serious email woes. “Undo Send” is finally available for Gmail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X