For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்கா-ஈரான் இடையே போர் வந்தால் இந்தியாவை மிக மோசமாக பாதிக்கும்! கற்பனை செய்ய முடியாத இழப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    நில நடுக்கம் ஏன் ஏற்பட்டது ? | Iran's earthquake happened maybe because of Atom Bomb test

    துபாய்: ஈரான்-அமெரிக்கா இடையே போர் வந்தால் இந்தியாவில் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்படும். வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டிய அபாயமும் ஏற்பட வாய்ப்பு உருவாகி விடும்.

    ஈரான் அமெரிக்கா இடையே போர் வரப்போகுது என்ற பதற்றத்தில் அமெரிக்க டாலரின் விலை சரசரவென சரிந்ததது. அதனால் டாலரில் முதலீடு செய்த பலர் தங்கத்தில் முதலீடு செய்தனர்.

    இதனால் கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் தங்கத்தின் விலை 3 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துவிட்டது. ஆம் 32 ஆயிரத்தை தொட்டுவிட்டது ஒரு சவரன் தங்கத்தின் விலை.

    அமெரிக்காவின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைக்க ஈரானால் முடியும்! விளைவும் மிக பயங்கரமாக இருக்கும்! அமெரிக்காவின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைக்க ஈரானால் முடியும்! விளைவும் மிக பயங்கரமாக இருக்கும்!

    விரைவில் மெயின் பிக்சர்

    விரைவில் மெயின் பிக்சர்

    இது சாம்பிள் தான்... மெயின் பிக்சர் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. ஈரான் ராணுவ தளபதி சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டதாலும் அதற்கு ஈரான் பழிவாங்கும் என்ற பதற்றத்தாலுமே தங்கத்தின் விலை உயர்ந்தது. இதுவே மக்களை அலறவைத்திருக்கும்.

    இந்தியாவுக்கு பாதிப்பு

    இந்தியாவுக்கு பாதிப்பு

    ஆனால் ஒருவேளை ஈரான்-அமெரிக்கா இடையே போர் ஏற்பட்டு எண்ணெய் கிணறுகளை ஈரான் தாக்க ஆரம்பித்தால் விளைவு படு பயங்கரமாக இருக்கும். ஏனெனில் ஏற்கனவே சவுதியில் ஒருஎண்ணெய் கிணறில் ஈரான் குண்டு வீசியிருக்கிறது. அதனால் சரசரவென விலை உயர்ந்து இந்தியாவில் சாமனியர்கள் ஒவ்வொருவரும் பெட்ரோலுக்கு அதிக விலை கொடுத்துவருவதும் உண்மை. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே போர் வந்தால் இந்தியாவில் ஏற்பட போகும் பாதிப்பு பல லட்சம் கோடிகளில் முடியும்.

    பணவீக்கம் உயரும்

    பணவீக்கம் உயரும்

    ஏனெனில் பெட்ரோல், டீசல் விலை தான் சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் தொடங்கி அனைத்து பொருட்களின் விலையையும் தீர்மானிக்கிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தால் , ஏற்கனவே பலவீனமாக இருக்கும் இந்தியாவின் பணவீக்கம் மேலும் மோசமடைந்துவிடும். கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் அதிகரித்தாலே, மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 10,700 கோடி கூடுதல் செலவு ஆகும். இது ரூபாய் மதிப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    அரபு நாட்டு பணம்

    அரபு நாட்டு பணம்

    அரபு நாடுகளில் இருக்கும், இந்தியர்கள் மூலம் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சத்து 87 ஆயிரம் கோடி ரூபாய் இந்தியாவுக்க அனுப்பி வருகிறார்கள். அமெரிக்கா - ஈரானிடையே போர் வந்தால், அரபு நாடுகளில் இருந்து வரும் 2.5 லட்சம் கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு பண வரவு பாதிக்கப்படுவதுடன் அவர்கள் அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலையால் நாடு திரும்பினால் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதை சமாளித்து மேலழுந்து வரும் காலங்கள் இந்தியாவுக்கு மிக கடினமானதாக இருக்கும்.

    வர்த்த போரைவிட

    வர்த்த போரைவிட

    அத்துடன் நிச்சயமற்ற நிலை காரணமாக வளைகுடா நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதும் கடினமாகிவிடும். இது சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக போரைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

    கட்டமைப்பையே மாற்ற

    கட்டமைப்பையே மாற்ற

    ஏனெனில் பெட்ரோல் டீசலுக்கு மாற்றான வழிகளை கண்டுபிடித்து அதில் வெற்றிகரமாக பயணிக்கும் முயற்சிகளை தொடங்க இன்னும் குறைந்தது 10 ஆண்டுகளாவது தேவைப்படும். மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை கொண்டு வந்தாலும் அதற்கு ஏற்ப ஒட்டுமொத்த கட்டமைப்பையும் மாற்றுவதும் சாத்தியம் அல்ல. எனவே தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்பது போல் எங்கேயோ போடும் சண்டை நம்மையும் மோசமாக பாதிக்கும் என்பதே மறுக்க முடியாத உண்மை.

    English summary
    how will india affect if war comes between iran and usa. if comes war indian economy may huge loss and worstly affect
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X