For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உங்க அருகில் கொரோனா வைரஸ் உள்ளவரை கண்டுபிடிப்பது எப்படி? சீனா வெளியிட்ட சர்ச்சை ஆப்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: உங்கள் அருகில் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறீர்களா, அத்துடன் உங்களுக்கும் கொரானா பாதிப்பு ஏற்படும் அச்சமா? அப்படி என்றால் நீங்கள் இந்த close condact detector ஆப்பை டவுன்லோடு செய்து கொண்டு செக் செய்து பாருங்கள் என சீன அரசு ஒரு மொபைல் ஆப்பை வெளியிட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் பூதாகரமாக உருவெடுத்துள்ளது. அந்த மக்களின் வாழ்வியலை புரட்டி போட்டுள்ளது. இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று தெரியால் தவித்து வருகிறது சீன அரசு.

நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2000க்கும் குறைவில்லாமல் உள்ளது. உயரிழப்போர் எண்ணிக்கை 100க்கும் குறைவில்லாமல் உள்ளது. சுமார் 70000 பேருக்கு இதுவரை சீனாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய நாள் வரை சுமார் 1700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளர்கள்,

கண்டுபிடிக்க முடியாது

கண்டுபிடிக்க முடியாது

இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் 15 நாட்களுக்கு வெகுசாதாரணமாக இருப்பார் என்பதால் அவரிடம் இருந்து மூச்சு காற்று மூலம் எளிதாக கொரோனா பரவுதே இவ்வளவு பெரிய பாதிப்புக்கு காரணம். 15 நாட்களுக்கு முன்பு கோவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளாரா இல்லையா என்பதை கண்டுபிடிக்க முடியாது என்பதால் சீன மக்கள் தங்கள் அருகில் உள்ள நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரா இல்லையா என்று தெரியாமல் அச்சத்தில் உள்ளார்கள். ஏனெனில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பலர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல மறுத்து நடமாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆப்பில் கண்டுபிடிக்கலாம்

ஆப்பில் கண்டுபிடிக்கலாம்

இதன் காரணமாக அருகில் உள்ளவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளரா என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சீன அரசு கொரோனா பாதிப்பை அறிய close condact detector என்ற ஆப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நாடானா சீனா, அந்நாட்டு சுகாதாரத்துறையுடன் இணைந்து இந்த ஆப்பை கடந்த பிப்ரவரி 8ம் தேதி வெளியிட்டது. இந்த ஆப்பை தரவிறக்கம் செய்த உடன் பயன்பாட்டாளரின் செல்போன் எண் மற்றும் அரசு வழங்கிய அடையாள அட்டை எண் ஆகியவற்றை பதிவிட வேண்டும்.

நீள நிறத்தில் காட்டும்

நீள நிறத்தில் காட்டும்

அப்படி பதிவிட்ட பின்னர் உடனடியாக அந்த ஆப்பை பொதுமககள் பயன்படுத்த தொடங்கலாம் என சீனஅரசு ஊடகமான சின்குவா செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியின் படி, close condact detector ஆப்பை பயன்படுத்துவோரின் அருகில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது ஒருவரோ அல்லது சந்தேகத்திற்கு உரிய ஒருவரா அல்லது பலரோ இருக்கும் பட்சத்தில் அங்கிருந்து உடனே வெளியேறுமாறும், சுகாதாரத்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறும் எச்சரிக்கும். அத்துடன் இந்த செயலியை பயன்படுத்தி கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவரை தேட தொடங்கினால் தேடுபவர் நீள நிறத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் சிவப்பு நிறத்திலும் காட்டும் என்கிறார்கள்.

மிக முக்கியமான கேள்வி

மிக முக்கியமான கேள்வி

இந்த ஆப் முழுமையாக நம்பகமாக தகவலை தருவதாகவும், இந்த ஆப்பிற்கு சீன அரசின் அனைத்து அமைச்சகங்களும் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் எதன் அடிப்படையில் இவர்கள் எல்லாம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள் சந்தேகத்திற்கு உரியவர்கள், இவர்கள் பாதிக்கப்படாதவர்கள் என்பதை மிகச்சரியாக வகைப்படுத்தி தெரிகிக்கிறது என்ற கேள்விக்கு சீன இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. மக்களை பற்றிய அரசிடம் உள்ள தகவலளை அப்படியே வெளியில் விடுகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது.

English summary
how working China's coronavirus 'close contact detector' app? - check the deatails here
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X