For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலிவுட் சாங்ஸ்.. அரங்கில் அதிர்ந்த மோடி மோடி.. 50,000 பேர் பங்கேற்று அசத்திய ஹவுடி மோடி!

டெக்ஸாஸ் மாகாணத்தில் நடக்கும் ஹவுடி மோடி நிகழ்வில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று அசத்தி இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

டெக்ஸாஸ்: டெக்ஸாஸ் மாகாணத்தில் நடக்கும் ஹவுடி மோடி நிகழ்வில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று அசத்தி இருக்கிறார்கள். இந்த விழா கண்ணை கவரும் கொண்டாட்டங்களுடன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

பலரும் எதிர்பார்த்த ஹவுடி மோடி விழா தற்போது ஹவுஸ்டன் நகரில் நடந்து வருகிறது. அமெரிக்காவின் ஹவுஸ்டன் நகரத்தில் நடக்கும் ஹவுடி மோடி விழாவில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

டெக்ஸாஸ் இந்தியா போரம் என்ற அமைப்பு மூலம் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெக்ஸாஸ் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் வாழும் இந்தியர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

எத்தனை பேர்

எத்தனை பேர்

இந்த விழா என்.ஆர்.ஜி மைதானத்தில் நடக்கிறது. 50 ஆயிரம் இந்தியர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர். காஷ்மீர் பண்டிட்கள், சீக்கியர்கள், தொழில் முனைவோர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள், இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க அதிகாரிகள் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

மோடி மோடி கோஷம்

இந்த விழா முழுக்க மோடி மோடி என்று மக்கள் கோஷமிட்டனர். மோடிக்கு விழா அரங்கிற்கு வெளியே 2 கிமீ தூரத்தில் இருந்து மிகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அரங்கிற்கு உள்ளே இருந்த மக்கள் 50 ஆயிரம் பேரும் மோடி மோடியை என்று கோஷமிட்டுக் கொண்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடல்

பாடல்

இந்த 3 மணி நேர நிகழ்வில் முதல் 90 நிமிடம் பாடல் நடனம் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் விழாவிற்குத்தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்கள் பாடல்கள் விழாவின் தொடக்கத்தில் ஒளிபரப்பப்பட்டது.

என்ன நடனம்

அதன்பின் பாலிவுட் பாடல்களுக்கு பலர் நடனம் ஆடினார்கள். பின் யோகா உள்ளிட்ட கலைகள் மேடையில் செய்து காட்டப்பட்டது. அரங்கிற்கு வெளியேயும் நிறைய கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

ஹவுடி

இந்த விழாவின் தொடக்கத்தில் பிரதமர் மோடிக்கு பெரிய அளவில் சாவி ஒன்று கொடுக்கப்பட்டது. ஹவுஸ்டன் மாகாண மேயர் சில்வஸ்டர் மற்றும் நிர்வாகிகள் இந்த சாவியை மோடிக்கு பரிசாக வழங்கினார்கள். அந்த நகரத்தின் சாவி என்று இதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. மரியாதை நிமித்தமாக இந்த சாவி அவருக்கு வழங்கப்பட்டது.

English summary
Howdy Modi Meet gets more than 50K audience: Modi Modi chants break the stadium.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X