For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியை வைத்து ''அரசியல்'' செய்யும் டிரம்ப்.. ஹவுடி மோடிக்கு ஓகே சொன்னது ஏன்? ஷாக்கிங் காரணம்!

பிரதமர் மோடி அமெரிக்காவில் நடத்த உள்ள ''ஹவுடி மோடி'' நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்வதற்கு பின் முக்கிய காரணங்கள் நிறைய இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    PM modi meeting with CEOs of top energy companies | மோடி முக்கிய எரிசக்தி நிறுவனங்களுடன் பேச்சு

    டெக்ஸாஸ்: பிரதமர் மோடி அமெரிக்காவில் நடத்த உள்ள ''ஹவுடி மோடி'' நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்வதற்கு பின் முக்கிய காரணங்கள் நிறைய இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

    அமெரிக்காவில் கடந்த 2016ல் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடைந்தார். 50 மாநிலங்களில் முதலில் பல்வேறு மாநிலங்களில் ஹிலாரிதான் முன்னிலை வகித்தார்.

    ஆனால் போக போக டிரம்ப் பல மாநிலங்களில் முன்னிலை வகித்து தேர்தல் நேரத்தில் வெற்றிபெற்றார். அதேபோல் அவர் மிக முக்கியமான பெரிய மாநிலங்களில் ஒன்றான டெக்ஸாஸ் மாநிலத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

    ஹவுடி மோடி.. எரிசக்தி நிறுவனங்களுடன் மோடி நடத்திய ஆலோசனை.. திரும்பி பார்க்கும் உலக நாடுகள்!ஹவுடி மோடி.. எரிசக்தி நிறுவனங்களுடன் மோடி நடத்திய ஆலோசனை.. திரும்பி பார்க்கும் உலக நாடுகள்!

    எப்படி டெக்ஸாஸ்

    எப்படி டெக்ஸாஸ்

    டெக்ஸாஸ் மாநிலத்தில் டிரம்ப் வெற்றி பெற்று இருந்தாலும் கூட அங்கு இருக்கும் இந்தியர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை . டிரம்ப் கொள்கைகள், வெளிநாட்டினருக்கு எதிராக இருக்கிறது என்று அமெரிக்க வாழ் இந்தியர்கள் கருதுகிறார்கள். முக்கியமாக அவரின் விசா மற்றும் குடியுரிமை கொள்கைகள்.

    என்ன குழப்பம்

    என்ன குழப்பம்

    ஆனால் அதே சமயம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடியின் கொள்கைக்கு ஆதரவாக பேசுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு தலைவர்களும் வலதுசாரி தலைவர்கள்தான். இந்தியாவில் பிரதமர் மோடி வைத்திருக்கும் கொள்கையைத்தான் அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் வைத்துள்ளார். ஆனால் டிரம்ப்பின் இந்த கொள்கைகளுக்கு அங்கிருக்கும் இந்தியர்கள் ஆதரவு தெரிவிப்பதில்லை.

    அடுத்த தேர்தல்

    அடுத்த தேர்தல்

    இந்த நிலையில் அடுத்த அதிபர் தேர்தலில் இந்த அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகள் டிரம்பிற்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுகிறது. இப்போது வரை நடந்த கருத்து கணிப்புகளில் டெக்ஸாஸ் மாகாணத்தில் டிரம்பின் குடியரசு கட்சி வெற்றிபெற வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. கண்டிப்பாக ஜனநாயக கட்சிதான் வெற்றிபெறும் என்று கூறி வருகிறார்கள்.

    ஆகவே துணை

    ஆகவே துணை

    ஆகவே பிரதமர் மோடி நடத்தும் ஹவுடி மோடி விழாவை தனது அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள டிரம்ப் முடிவு செய்துள்ளார். டெக்ஸாஸ் மாகாணத்தில்தான் இந்த மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டின் மூலம் இந்தியர்களை கவர்ந்தால் டெக்ஸாஸ் மாகாணத்தில் வெற்றியை ருசிக்கலாம் என்று டிரம்ப் நினைக்கிறார். இதன் மூலம் மீண்டும் அமெரிக்காவின் அதிபர் ஆக அவர் திட்டமிடுகிறார்.

    மோடி உதவி

    மோடி உதவி

    வெளிநாட்டு மக்களுக்கு அதிபர் டிரம்ப் எதிராக இருக்கிறார் என்று புகார் உள்ளது. இதை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று அவர் முயன்று வருகிறார். இதனால்தான் இன்று மோடியுடன் அவர் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார். மோடியை விரும்பும் அமெரிக்க வாழ் இந்திய மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று டிரம்ப் நம்புகிறார். அது ஒரு விதத்தில் உண்மைதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    சிக்கல்

    சிக்கல்

    மோடியின் இந்த விழா அமெரிக்க வாழ் இந்தியர்கள் மூலம் நடத்தப்படுகிறது. இதில் இன்று இரவு டிரம்ப் பேச உள்ளார். இந்த விழாவில் அவர் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட போகிறார் என்று கூறுகிறார்கள். இதனால் மோடி - டிரம்ப் கலந்து கொள்ளும் இந்த கூட்டம் அதிக கவனம் ஈர்த்து இருக்கிறது.

    யார் கொடுத்த ஐடியா

    யார் கொடுத்த ஐடியா

    இதனால்தான் மத்திய அரசு கேட்டவுடன் டிரம்ப் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டு இருக்கிறார். 2020 பாதியில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்க உள்ளது. அதற்கான விதை இப்போதே டெக்ஸாஸ் மாகாணத்தில் வீசப்பட்டுவிட்டது. இனி சூழ்நிலை டிரம்ப் பக்கம் திரும்புமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English summary
    Howdy Modi meeting: Why Trump Accepts the invitation of India and joins the meet? - Here is the reason.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X