For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இப்படியே போனால் மொத்தமாக அழியும்.. மீண்டும் தீ பிடித்த அமேசான்.. 10 வருடத்தில் மோசமான காட்டுத் தீ!

உலகின் மிகப்பெரிய காடான அமேசான் காடு தற்போது மூச்சு விட முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

அமேசானியா: அதிக உயிரினங்கள், விலங்குகள், கோடிக்கணக்கான மரங்களை கொண்டு இருக்கும் உலகின் மிகப்பெரிய காடான அமேசான் காடு தற்போது மீண்டும் தீ பிடித்து எரிந்து கொண்டு இருக்கிறது.

அமேசான் காட்டில் மீண்டும் மிகப்பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. திடீரென காரணமே இன்றி தொடங்கிய இந்த காட்டுத்தீ தற்போது வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது.

கடந்த வருடம் மட்டும் அங்கு மொத்தமாக 93000 காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அமேசான் காட்டில் காட்டுத் தீ புதிதாக ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த முறை ஏற்பட்ட காட்டுத்தீக்கு பின் கார்ப்பரேட் நிறுவனங்களின் சூழ்ச்சி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

2010ல் போட்ட விதை.. 2016ல் நடந்த டுவிஸ்ட்.. எதிர்பார்க்காத மாற்றம்.. ஆன்லைன் ஷாப்பிங்கில் இனி!2010ல் போட்ட விதை.. 2016ல் நடந்த டுவிஸ்ட்.. எதிர்பார்க்காத மாற்றம்.. ஆன்லைன் ஷாப்பிங்கில் இனி!

மிக மோசம்

மிக மோசம்

இந்த வருடம் காட்டு தீ மிக மோசமாக தொடங்கி இருக்கிறது. மிக மோசம் என்றால் போன வருடத்தை விட மிக மோசமான காட்டு தீயாக இந்த வருடம் உருவெடுத்து உள்ளது. சென்ற வருடம் காட்டு தீ முதலில் வேகம் எடுக்க இரண்டு மாதம் ஆனது. இரண்டு மாதம் கழித்துதான் இந்த காட்டு தீ வேகம் எடுத்தது. அதுவே சொல்ல முடியாத சேதங்களை ஏற்படுத்தியது.

 10 நாட்கள்

10 நாட்கள்

ஆனால் இந்த முறை வெறும் 10 நாட்களில் காட்டு தீ மிக வேகமாக உருவெடுத்து பரவி வருகிறது. மொத்தம் 10136 இடங்களில் இந்த முறை காட்டு தீ ஏற்பட்டுள்ளது . ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்கிய இந்த காட்டு தீ மிக வேகமாக பரவி வருகிறது. சென்ற வருடத்தை விட 17% அதிகமாக இந்த முறை அங்கு காட்டு தீ ஏற்பட்டுள்ளது.மொத்தம் காட்டு பகுதியில் மட்டும் 81% கூடுதலாக தீ ஏற்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களில் இதுதான் மிக மோசமானது என்று கூறுகிறார்கள்.

வானிலை மோசம்

வானிலை மோசம்

கடந்த முறை உலக அளவில் வானிலை இதனால் மோசம் அடைந்தது. பருவநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. இந்த முறை அதை விட மிக மோசமான பருவநிலை மாற்றம் ஏற்படும் என்று கூறுகிறார்கள். சென்ற முறையை விட இந்த முறை பாதிப்பு இதனால் அதிகம் இருக்க போகிறது. இதை எப்படி உலக நாடுகள் சமாளிக்க போகிறது என்று தெரியவில்லை.

 என்ன காரணம்

என்ன காரணம்

அருகாமையில் உள்ள பிரேசில் உள்ளிட்ட நாடுகளில், ஏற்பட்ட காலநிலை மாற்றமும், அதீத விவசாய உர பயன்படும், மீத்தேன் வாயு உருவாக்கமும் இந்த காட்டுத் தீ ஏற்படுவதற்கு காரணம் என்கிறார்கள். ஆனால் இதன் தொடக்கம் எங்கே என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தீ பரவுவதை தடுக்கவும் முடியவில்லை.

அரசு தவறு

அரசு தவறு

இதற்கு அந்த நாட்டின் அரசு செய்த தவறுதான் காரணம் என்கிறார்கள். அமேசான் காட்டை பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு எடுக்கவில்லை என்று புகார் உள்ளது. இதற்காக அந்த நாட்டு அரசு ஆப்ரேஷன் கிரீன் பிரேசில் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த திட்டம் பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை. இந்த திட்டம் தோல்வி அடைந்துவிட்டது.. இப்போது மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது , என்று பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Huge Forrest fire against lashing out Amazon: Worst fire in last ten years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X