For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டையே சூழ்ந்த புகை.. 10 நாளாக கொழுந்து விட்டு எரியும் அமேசான் காடு.. உலக அழிவிற்கான அறிகுறியா?

Google Oneindia Tamil News

Recommended Video

    10 நாளாக கொழுந்து விட்டு எரியும் அமேசான் காடு.. வீடியோ

    அமேசானியா: உலகின் மிகப்பெரிய காடான அமேசான் காடு தற்போது மூச்சு விட முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது. உலக வரலாற்றில் இல்லாத அளவிற்கு தற்போது அங்கு மிகப்பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

    கடந்த வாரம் பிரேசில், சாவ் பாவுலோ ஆகிய நாடுகளை திடீர் என்று பெரிய அளவில் கரும் புகை சூழ்ந்தது. வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த மக்கள் பக்கத்து வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறதோ என்று சோதித்து பார்த்தனர்.

    ஆனால் அங்கு மட்டுமில்ல, அவர்களின் நாடு முழுக்க பெரிய அளவில் கரும்புகை பரவியது. புகையால் பட்டப்பகல் கூட கொடும் இரவு போல மாறியது. இந்த கரும் புகைக்கு காரணம் 1700 மைல்கல் தொலைவில் இருக்கும் அமேசான் காடு.

    காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது

    காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது

    தற்போது அமேசான் காட்டில் மிகப்பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இந்த காட்டுத்தீ தற்போது வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. கடந்த 6 மாதத்தில் மட்டும் அங்கு மொத்தமாக 73000 காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதில் 90% காட்டுத் தீ இன்னும் அணையவில்லை. நாளுக்கு நாள் அமேசான் காட்டில் காட்டுத் தீ புதிதாக ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.

    எப்படி ஏற்படுகிறது

    எப்படி ஏற்படுகிறது

    பொதுவாக மழை காடுகளில் காட்டுத் தீ ஏற்படுவது அரிது. ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் ஏற்படும் வெயில் காரணமாக அமேசான் காடுகளில் காட்டுத் தீ ஏற்பட்டு உடனே அணைவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே காட்டுத் தீ அங்கு ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த காட்டுத் தீ மொத்தமாக பெரிய அளவில் பரவி மொத்த காட்டையே ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளது

    என்ன காரணமும்

    என்ன காரணமும்

    அருகாமையில் உள்ள பிரேசில் உள்ளிட்ட நாடுகளில், ஏற்பட்ட காலநிலை மாற்றமும், அதீத விவசாய உரத்துக்கு பயன்படும், மீத்தேன் வாயு உருவாக்கமும் இந்த காட்டுத் தீ ஏற்படுவதற்கு காரணம் என்கிறார்கள். ஆனால் இதன் தொடக்கம் எங்கே என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தீ பரவுவதை தடுக்கவும் முடியவில்லை.

    காட்டுத் தீ எவ்வளவு பெருசு

    காட்டுத் தீ எவ்வளவு பெருசு

    இந்த காட்டுத் தீ காரணமாக ஏற்பட்ட புகை பிரேசில், சாவ் பாவ்லோ, கொலம்பியா உள்ளிட்ட பல நாடுகளில் பரவி உள்ளது. அந்த அளவிற்கு இந்த காட்டுத் தீ பெரிதாக்கிக் கொண்டே செல்கிறது. மிக முக்கியமாக சாட்டிலைட் மூலமாக பார்த்தாலே தெரியும் அளவிற்கு இந்த காட்டுத் தீ விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    வாய்ப்பில்லை

    ஒருமுறை மழை காடு ஒன்றில் ஒரு மரம் விழுந்தால் அங்கு மீண்டும் அது முளைக்க பல வருடம் ஆகும். இதனால் மழை காடுகளை பாதுகாப்பது மிக முக்கியமான விஷயம் ஆகும். ஆனால் தற்போது உலகின் மிகப்பெரிய மழை காடான அமேசானில் மிகப்பெரிய காட்டுத் தீ ஏற்பட்டு அதை அழித்து வருகிறது.

    அட கடவுளே

    இது கொழுந்துவிட்டு எரியும் புகைப்படங்கள் இதயத்தை நொறுக்கும் வகையில் உள்ளது. இதனால் அங்கு பல்லாயிரம் விலங்குகள், பறவைகள் பலியாகி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அதேபோல் பல லட்சம் மரங்கள் இதனால் எரிந்து சாம்பல் ஆகி இருக்கும் என்கிறார்கள்,

    முக்கியம்

    உலகில் மொத்தம் உருவாகும் ஆக்சிஜன்களில் 20% ஆக்சிஜன் அமேசான் மூலம்தான் உருவாக்கப்படுகிறது. அதேபோல் உலகில் உள்ள விலங்குகளில் 40% விலங்குகள் இந்த காட்டில்தான் இருக்கிறது. இதனால்தான் இந்த அமேசான் காட்டை ''பூமியின் இருதயம்'' என்று குறிப்பிடுகிறார்கள். இதுதான் பூமி வெப்பம் அடைவதை தடுத்து வருகிறது.

    மிக மோசம்

    தற்போது அந்த ''பூமியின் இருதயம்'' புகையால் மூடப்பட்டு நெருப்பில் வெந்து கொண்டு இருக்கிறது. இதை தடுக்க முடியாமல் மனித இனமும் கையாலாகாத நிலையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது. அமேசான் காட்டில் இப்போது ஏற்படும் இழப்பை சரி செய்ய பல நூறு வருடங்கள் ஆகும் என்று கூறுகிறார்கள்.

    எப்படி ஐஸ்

    எப்படி ஐஸ்

    ஒரு பக்கம் அண்டார்டிக்காவில் ஐஸ் வேகமாக உருகிக் கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் தற்போது அமேசான் காடுகள் எரிந்து கொண்டு இருக்கிறது. இயற்கையின் இந்த கோபம் உலக அழிவிற்கான அறிகுறியாக இருக்குமோ என்று இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Huge Forrest fire lashed out Amazon: Thousands of Birds and Animals died in a week.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X