For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெசருசலேத்தை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிப்பதா?.. டிரம்ப்புக்கு எதிராக இந்தோனேசியாவில் கொந்தளிப்பு

ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்த அமெரிக்க அதிபருக்கு எதிராக இந்தோனேசியாவில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பாலி: ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டார்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பிற்கு பாலஸ்தீனம், லெபனான் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. அரபு நாடுகளும் அவருக்கு எதிராக நிறைய கருத்துக்களை தெரிவித்து இருந்தது.

தற்போது உலகின் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் பெரிய மக்கள் போராட்டமே வெடித்து இருக்கிறது.

தலைநகர் பிரச்சனை

தலைநகர் பிரச்சனை

டெல் அவிவ் என்ற சிறிய பகுதியே இவ்வளவு நாட்களாக இஸ்ரேலில் தலைநகராக இருந்து வந்தது. இந்த நிலையில் ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டார். இந்த அறிவிப்பு இஸ்ரேலுக்கு அரசியல் ரீதியாக எந்த அதிகாரத்தையும் வழங்காது எனினும் புவியியல் ரீதியாக நிறைய அதிகாரங்களை வழங்கும். இது தற்போது பெரிய பிரச்னையை உருவாக்கி இருக்கிறது.

போராட்டம்

போராட்டம்

இந்த நிலையில் அவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜெருசலேமை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஏற்றுக்கொள்ள முடியாது என உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியா மக்கள் போராட்டம் செய்ய ஆர்மபித்தனர். அந்நாட்டின் தலைநகரான ஜகர்தாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்னர் இன்று காலையில் இருந்து பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இதயம்

எங்களுடைய இதயம்

இந்த நிலையில் இந்த அறிவிப்பால் இஸ்ரேலில் இருக்கும் முஸ்லிம்களும், ஜெருசலேமை நம்பி இருக்கும் பாலஸ்தீனமும் அதிகம் கஷ்டப்படுவார்கள் என்று இந்தோனேசியா மக்கள் பேசியுள்ளனர். மேலும் 'பாலஸ்தீனம் எங்கள் இதயம்' என்ற பதாகைகளுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர். இந்த போராட்டம் பெரிய அளவில் நடந்து வருகிறது.

அமைதிக்கு கேடு

அமைதிக்கு கேடு

மேலும் அந்த நாட்டு மக்கள் அமெரிக்காவிற்கு எதிராக மிகவும் கோபமாக கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி ''அமெரிக்கா இஸ்ரேலுடன் கூட்டு சேர்ந்து உலகத்தின் அமைதியை போக்குகிறது. மக்களை நிம்மதியாக இருக்கவிட கூடாது என்று டிரம்ப் வேலை செய்கிறார். இதுகுறித்து அனைத்து நாடுகளும் பேச வேண்டும். முக்கியமாக ஐநா சபையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.

English summary
America President Trump has announced that the Jerusalem as the capital of Israel. He said that United States will recognize the Jerusalem as the capital of Israel. Huge protest held in Indonesia agains Trump's decision on Jerusalem
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X