For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சைபீரிய கடற்கரையில் திடீரென தோன்றிய ‘மெகா சைஸ்’ பனிக்கட்டி உருண்டைகள்... பீதியில் உறைந்த மக்கள்

சைபீரியா கடற்கரையில் திடீரென தோன்றிய பனிக்கட்டி உருளைகளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

மாஸ்கோ: சைபீரியா கடற்கரையில் திடீரென தோன்றிய பனிக்கட்டி உருளைகளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வடமேற்கு சைபீரியவின் ஒபி வளைகுடா கடற்பகுதி இயற்கை எழில் மிகுந்த கடற்கரையாகும். இங்கு கடற்கரையை ஒட்டிய கிராம மக்கள் இளைஞர்கள் மட்டுமின்றி ஏராளமான சுற்றுலாப்பயணிகளும் நேரத்தை செலவழித்து வருகின்றனர்.

huge snow balls appears on beach in siberia

இந்நிலையில் காலை கடற்கரைக்கு வந்த மக்கள் கரையோரத்தில் ஒதுங்கியிருந்த மெகா சைஸ் பனிக்கட்டி உருண்டைகளை கண்டு அதிர்ச்சியடைந்தனர். யாரோ செய்து வைத்தது போல் உள்ள அந்த உருண்டைகளை தொட்டு பார்க்கவே அச்சப்பட்டனர்.

பயம் தெளிந்த சிலர் அவற்றை கையில் எடுத்து பார்த்தப்போது அவை பனிக்கட்டி உருளைகள் தான் உறுதி செய்து நிம்மதி பெருமூச்சு விட்டனர். டென்னிஸ் பந்து சைசிலிருந்து ஒரு மீட்டர் வரை அந்த பனிக்கட்டி உருளைகள் இருந்தன.

கடற்கரை முழுவதும் 18 கிலோ மீட்டர் தூரத்துக்கு அடுக்கி வைத்ததுபோல் காணப்பட்ட பனிக்கட்டி பந்துகளை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களும் வியப்புடன் பார்த்துச்சென்றனர்.

கடற்கரையை ஒட்டிய நைடா கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் வாழ்நாளில் இதுபோன்று பனிக்கட்டி உருண்டைகள் ஒதுங்கி பார்த்ததே இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்த சுற்றுழ்சூழல் ஆராய்ச்சியாளர்கள், 'பருவநிலை மாற்றத்தால் கடலின் மேற்பரப்பில் உருவான பனிக்கட்டிகள் காற்று மற்றும் அலையின் வேகத்தால் பனிக்கட்டி பந்துகள் போல் உருவானதாக' தெரிவித்தனர்.

English summary
Thousands of big size snow balls appeared in 18 km stretch of a beach in siberia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X