For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"சன்"னெல்லாம் இதுக்கு முன்னாடி சின்னது... அதை விட 3 கோடி மடங்கு பெரிய 9 ஸ்டார்கள் கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

சான்டியாகோ: சூரியனை விட அளவில் 3 கோடி மடங்கு பெரிய 9 நட்சத்திரங்களை ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது.

இந்த 9 நட்சத்திரங்களையும் மொத்தமாக சேர்த்தால் அவை சூரியனை விட 3 கோடி மடங்கு பிரகாசத்தைத் தருமாம். நமது அண்டவெளியிலேயே இவையும் உள்ளனவாம்.

இந்த நட்சத்திரக் கூட்டமானது பூமியிலிருந்து 1 லட்சத்து 70 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நட்சத்திரக் கூட்டத்திலேயே பெரிதானது இதுதானாம்.

Huge stars 30 million times brighter than the sun spotted

முக்கியக் கண்டுபிடிப்பு...

பெரிய நட்சத்திரங்கள் எப்படி உருவாகின்றன என்ற ஆய்வுக்கு இந்தக் கண்டுபிடிப்பு பெரும் உதவியாக இருக்கும். அதை விட முக்கியமாக வயதாகி விட்ட ஹப்பிள் தொலைநோக்கி மிக முக்கியக் கண்டுபிடிப்பைக் கொடுத்துள்ளதுதான் விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

வெளிச்சக் கீற்றுகள்...

நமது பால்வழி மண்டலத்தில் உள்ள துணை நட்சத்திரக் கூட்டத்தில் இந்த புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நட்சத்திரங்கள் காணப்படுகின்றன. இந்த நட்சத்திரக் கூட்டம் உள்ள இடம் மிகவும் சிறியது. அதாவது ஒரு முட்டு் சந்து போன்ற இடம். ஆனால் அவற்றிலிரு்து மிகப் பிரகாசமான வெளிச்சக் கீற்றுகள் வந்து கொண்டுள்ளன. மேலும் இந்த நட்சத்திரங்களிலிரு்து புற ஊதாக் கதிர்கள் பெருமளவில் வருகின்றனவாம்.

ஆர்126ஏ1...

இருப்பதியே மிகப் பெரிய நட்சத்திரக் கூட்டம் ஆர்126ஏ1 என பெயிரிடப்பட்டுள்ள நட்சத்திரம்தான். அதனுடன் ஒப்பிடுகையில் இந்த புதிய நட்சத்திரக் கூட்டம் சற்று பிரகாசம் குறைவுதான்.

புதிய நட்சத்திரங்கள்...

இதுகுறித்து ஷெப்பீல்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பால் கிரவுதர் கூறுகையில், ‘கடந்த 2010ம் ஆண்டு ஆர்136 நட்சத்திரக் கூட்டத்தில் நான்கு புதிய நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை சூரியனை விட 150 மடங்கு அதிக எடை கொண்டவையாகும். தற்போது இதே நட்சத்திரக் கூட்டத்திற்குள் மேலும் 5 பெரிய நட்சத்திரங்கள் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது' என்றார்.

சூரியனைவிட பெரியவை...

இதற்கிடையே சூரியனை விட மிகப் பெரிய நான்கு கிரகங்களை இ்ன்னொரு விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள சிலி நாட்டின் மத்தியாஸ் ஜோன்ஸ் என்பவர் தலைமையில் விண்வெளி ஆய்வு நடந்து வருகிறது. ஜோன்ஸ் குழுவினர், 1.5 மீட்டர், 2.2 மீட்டர், 3.9 மீட்டர் அளவுடைய தொலைநோக்கிகளை சிலி மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள ஆய்வகங்களில் நிறுவி விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

எடை அதிகம்...

அப்போது சூரியனை விட மிகப்பெரிய 4 புதிய கிரகங்கள், விண்வெளியில் நட்சத்திரங்களைப் போல சுற்றி வருவதை கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகங்கள் வியாழன் கிரகத்தை விட 2.4 முதல் 5.5 சதவீதம் வரை எடை அதிகம் உடையவையாக உள்ளன.

1560 நாட்கள்...

மேலும், இந்த புதிய கிரகங்கள் 2 முதல் 4 பூமி ஆண்டு கணக்கில் நட்சத்திரங்களை சுற்றிவருவதும் தெரிய வந்துள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகங்களுக்கு இக் குழுவினர் எச்ஐபி8541, எச்ஐபி74890, எச்ஐபி84056, எச்ஐபி95124 என பெயரிட்டுள்ளனர். இவற்றில் முதலில் கூறப்பட்ட எச்ஐபி8541 கிரகம்தான் மற்ற மூன்றை விட மிகப்பெரியது. இது நட்சத்திரத்தை சுற்றிவர 1560 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. இந்த கிரகங்கள் சுற்றிவரும் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் சூரியனை விட மிகப்பெரியவையாக இருக்கின்றன.

English summary
There are nine massive stars, together 30 million times brighter than our sun, sitting out in the universe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X